ஆட்டுக்குட்டியும் புறாவும் THE LAMB AND THE DOVE 56-09-17 உங்களுக்கு மிக்க நன்றி. மீண்டுமாக இந்த இரவில், லாஸ் ஏஞ்சல்ஸ் நகரின் மையப்பகுதியில் தெய்வீக சுகமளித்தல், மற்றும் கர்த்தராகிய இயேசுவின் உயிர்த்தெழுதலின் ஞாபகச் சின்னமாக அமைந்திருக்கிற தூதர்களின் பெயரைக் கொண்ட இந்த அழகான ஆலயத்தில் ஒன்றாக கூடி வந்திருப்பது உண்மையில் பாக்கியமாக இருக்கிறது. சகோதரி மெக்ஃபெர்சன் அவர்களின் மகன், அவர்களில் யாரோ ஒருவர் "நாங்கள் இயேசுவைக் காண விரும்புகிறோம் என்று எழுதப்பட்டிருப்பதை மற்றொரு நாள் எனக்கு காண்பித்தனர். அது உண்மையில் மிகவும் நன்றாக இருக்கிறது. உங்களுக்கும் அப்படி இல்லையா? "நாங்கள் இயேசுவைக் காண விரும்புகிறோம்'' இப்பொழுதும் இன்றிரவு இந்த இடம் நிரம்பி வழிவதைப் பார்க்கும் போது இன்றிரவு மீண்டுமாக நான் மகிழ்ச்சியடைகிறேன். ஆகவே இது உங்களுடைய இரண்டாவது ஆராதனை. நான் பேசுவதற்கு போய் கொண்டிருக்கும் போது என்னுடைய அருமை நண்பர் டாமி ஹிக்ஸ் (Tommy Hicks) அவர்களை சந்தித்தேன். உண்மையில் அவர் ஒரு தீரமிக்க விசுவாசமுள்ள சகோதரர். மேலும் சகோதரன் ஓரல் இராபர்ட்ஸ் (Bro.Oral Roberts) மற்றும் உள்ள சகோதரர்கள் இந்த நாளின் மகத்தான அசைவில் இருந்து கொண்டிருக்கின்றனர். ஆகவே இங்கே அவர்களுடன் தொடர்பு கொண்டிருப்பதில் நான் மிகவும் சந்தோஷமாக இருக்கிறேன். நான் லாஸ் ஏஞ்செல்ஸக்கு வரும் போது கொஞ்சம் தொண்டை கரகரப்புடன் தான் வருகிறேன். இப்பொழுதுதான் கனடாவில் இருந்து திரும்பி வந்தேன், அங்கே குளிராக இருக்கிறது அதன் பிறகு கீழே வரும் போது மிகவும் வெப்பமாக இருந்தது, அது வித்தயாசமாக செய்து விடுகிறது. 1a. ஆகவே இன்றிரவு தேவன் மிகுதியாகச் செய்வார் என்று நாம் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றோம். பண்டைய பாணியிலான பரிசுத்த ஆவியின் உண்மையில் திரும்பவுமாக ஊற்றப்படுகிறதை ஒவ்வொரு இரவிலும் நாம் கவனித்துக் கொண்டிருக்கிறோம். சகோதரி மெக்பர்ஸன் அவர்கள் இங்கே வந்து அப்படிப்பட்ட அந்த அற்புதமான கூட்டங்களை நடத்திய அந்த நாளில் வாழ்ந்திருக்கவும் காணவும் நான் விரும்பினேன், விசுவாசமுள்ள ஜனங்கள் மற்றும் அநேக பரிசுத்தவான்களின் இதயங்களில் அது இன்னுமாக நீடிக்கிறது என்று நான் நம்புகிறேன், அது இன்றுமாக அவர்களை நினைவில் வைத்திருக்க செய்கிறது. மேலும் எப்படியாக.....இந்த இருக்கைகளின் நடைபாதைகளில் எப்படியாக நடந்து சென்று பீடங்களைச் சுற்றி நின்று மனம் திரும்ப.... என்னிடம் அவர்களுடைய பிரசங்கங்கள், பதிவு செய்யப்பட்ட பதிவுகள் சில என்னிடம் இருக்கிறது. அவர்களுடைய புத்தகங்களை நான் படித்தேன். நான் நிச்சயமாகவே அவர்களை கர்த்தருடைய ஊழியக்காரர் என்று போற்றுகிறேன். அவர்களுடைய புத்தகங்களை நான் படித்தேன். நான் நிச்சயமாகவே அவர்களை கர்த்தருடைய ஊழியக்காரர் போற்றுகிறேன். அவர்களுடைய வாழ்க்கைப் பயணத்தில் நான் சந்திக்க என்று முடியவில்லை ஆனால் தேவனுடைய கிருபையால் நாம் அப்பால் கடந்து செல்லும் போது நான் சந்திப்பேன். ஆகவே..... நான் லாஸ் ஏஞ்சல்ஸ் பட்டிணத்திற்கு வந்த போது, வந்த போது. முதலில் சென்ற இடங்களில் ஒன்று அவர்களுடைய சரீரம் ஓய்வு எடுத்துக் கொண்டிருக்கும் இடம்தான், அங்கே என்னுடைய தொப்பியைக் கழற்றிவிட்டு, சகோதரி மெக்பெர்சனின் விசுவாசமுள்ள வாழ்க்கைக்காகவும், அவர்கள் செய்த இந்த அற்புதமான ஊழியத்திற்காகவும் தேவனுக்கு நன்றி கூறினேன். அவர்களுக்கு பின்பு அதை விட்டுச் சென்றிருக்கிறார்கள். [சபையார் கை தட்டுகிறார்கள்] நன்றி. அவர்களுடைய மகனை சந்திக்கின்ற போது அவனிடம் அப்படி ஒரு நல்ல குணம் இருப்பதை பார்த்ததும், அவன் ஒரு நல்ல பின்னணியில் இருந்து வந்தவன் என்பதை அது காட்டுகிறது. அவனுடைய தந்தையைப் போல இருந்திருக்க வேண்டும்? 1b. உங்கள் ஊழியக்காரர்களில் டாக்டர் கோர்ட்னி (Dr.Courtney], டாக்டர் க்யூமிங்ஸ் (Dr. Cummings) மற்றும் டாக்டர் டி.போர்ட் [Dr.TeeFord] அவர்களில் பலரை நான் இங்கு அறிவேன். அத்தகைய துணிச்சலான சகோதரர்கள் ஒரு மகத்தான ஊழியத்தை செய்து வருகிறார்கள். ஆகவே நான் மிஸ்டர் மெக்ஃபெர்சன் அல்லது சகோதரர் மெக்ஃபர்சன் அவர்களிடம் "கர்த்தராகிய இயேசுவுக்காக நீங்கள் செய்யும் முயற்சிகளை நான் எவ்வளவாக பாராட்டுகிறேன்" என்று கூறிக்கொண்டிருந்தேன். "சகோதரர் பிரன்காம் அவர்களே, அதை தாங்குவதற்காக மட்டுமே சற்று முயற்சி செய்து கொண்டிருக்கிறோம்" என்று அவர் கூறினார். ஆனால் நீங்கள் என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள் என்பதை நீங்கள் உணர்ந்து கொள்ளவில்லை. உலகம் முழுவதிலும் உள்ள ஊழியக்களங்களில் எங்கே சென்றாலும் அந்த நான்கு சதுர (Four Square) ஊழியக்காரர்களை சந்திக்கிறேன்." என்று கூறினேன். எனவே இந்த சுவிசேஷமானது லாஸ் ஏஞ்சல்ஸ் மற்றும் இங்கு உள்ள ஜனங்களுக்கு மட்டும் செல்லவில்லை என்பதைக் காட்டுகிறது. கவனியுங்கள் இந்த சிறிய இடத்திலிருந்து உலகம் முழுவதும் அது பரவுகிறது. அந்த அடையாளங்கள் அந்த ஊழியக்காரர்களைச் சுற்றிலும் அடையாளங்களாக இருந்து கொண்டிருக்கிறது என்கிற அடையாளத்தை அது காண்பிக்கிறது. ஆகவே அது தகுதியான ஒரு காரியமாக இருக்கிறது. ஆகவே இது ஒரு தகுதியான காரியம் என்று உங்களுக்குச் சொல்கிறேன். தேவன் அவர்களுடைய தீரமிக்க ஆன்மாவை அமைதிபடுத்தினார். "அவர்களுடைய பிரயாசங்களில் இருந்து அவர்களை ஓய்வெடுத்துக் கொண்டிருக்க செய்கிறார்; ஆனால் அவர்களுடைய கிரியைகள் அவர்களை பின் தொடர்கின்றது." என்று வேதம் கூறுகிறது. மேலும் நான் லாங்ஃபெல்லோவின் (Long Fellow)- கல்லறையில் நின்று கொண்டிருந்த போது, அது "ஜீவனின் சங்கீதம்" என்று நினைக்கிறேன், "பிரிவுகள் காலத்தின் மணல் பரப்பில் நமக்குப் பின்னால் கால் தடங்களை விட்டுச் செல்கின்றன" அது உண்மை. அப்படியானால் கிறிஸ்து இயேசுவுக்காக ஒரு தீரமிக்க வாழ்க்கை வாழ்வது என்றால் என்ன என்று பார்க்கும் போது. நாம் எப்படிப்பட்ட நபர்களாக இருக்க வேண்டும்? நமக்குப் பின்னால் நாம் விட்டுச் செல்வோம்: மகத்தான நபர்களின் வாழ்க்கை நமக்கு நினைவூட்டுகிறது, நாம் பிரிந்து செல்வதன் மூலம் நம் வாழ்க்கையை உன்னதமாக்கிக் கொள்ள முடியும். காலத்தின் மணல் பரப்பில் நமக்குப் பின்னால் நம் கால் தடங்கள். நான் அதை விரும்புகிறேன். 1c. இப்பொழுது கடந்த மாலை அல்லது ஞாயிறு பிற்பகல் இந்த அருமையான மக்களிடம் பேசுவதற்கு பாக்கியமும், பெருமையும் எனக்குக் கிடைத்தது. அதை ஒரு பாராட்டுக்காக சொல்ல வேண்டாம் என்று நினைக்கிறேன். இன்றிரவு நான் இங்கே இருக்கிறேன் என்பதற்காக நான் அதைக் கூறவில்லை. இன்றிரவு மிகச் சிறந்த குடிமக்கள் இங்கே இருக்கிறார்கள் என்று நினைக்கிறேன். அந்த ஜனங்களில் நிறையப்பேர் தேவனுடைய தெரிந்து கொள்ளப்பட்ட பிள்ளைகளாக இருக்கின்றனர். நான் உங்கள் மத்தியில் வந்த போது அற்புதமான பரிசுத்த ஆவியின் வெளிப்பாடுகளை கேட்டேன் அது என்னை மகிழ்ச்சியில் அழ வைத்தது, ஏனென்றால் அந்த இயேசுவானவர் இன்றுமாக ஜீவித்துக் கொண்டிருக்கிறார் என்று நான் அறிவேன். ஆகவே நான் பதற்றமடைந்தேன். நான் மில்டவுன் இண்டியானாவில் உள்ள பாப்டிஸ்ட் தேவாலயத்தில் போதகராக இருந்தேன். நான் இரவில் வீட்டிற்கு வரும் போது அல்லது தங்கியிருந்த இந்த இடத்திற்கு வருவேன், நான் ஜெபர்சன்வில்லில் வசித்துக் கொண்டிருந்தேன். வீட்டுக்கு வரும் போது ஒரு வயதான நைட்டிங்கேல் பறவை ஒரு புதரில் அமர்ந்து கொண்டு இரவில் நீண்ட நேரம் பாடிக் கொண்டிருப்பதைக் கவனித்தேன். அந்த நைட்டிங்கேல் பறவையானது ஏன் அப்படி பாடிக் கொண்டிருந்தது என்று எனக்கு ஆச்சரியமாக இருந்தது. நான்..... அதனால் நான் நைட்டிங்கேல் பறவையைப் பற்றி அறிந்து கொள்ள படிக்க ஆரம்பித்தேன். அவைகள் இரவு நேரத்தில் அதனுடைய தலையை மேல் நோக்கி வைத்துக் கொண்டிருக்கும். மேலும் அதனுடைய கண்களை சரியாக மத்தியில் வைத்துக்கொண்டு பாடத் துவங்கும். ஏனென்றால் அங்கே ஒரு நட்சத்திரமானது ஒளிர்ந்து கொண்டிருந்தது. அந்த சூரியன் எங்கோ ஓர் இடத்தில் ஒளிர்ந்து கொண்டிருக்கிறது என்பது அவைகளுக்குத் தெரியும். ஆகவே இது போன்ற ஒரு கூடுகையை நாம் கொண்டிருக்கும் போது, மேலும் அந்த தேவனுடைய பரிசுத்த ஆவியானது ஜனங்கனின் மத்தியில் கிரியை செய்து கொண்டிருக்கும் போது நானும் கூட பாட முடியும், ஏனென்றால் தேவன் எங்கோ ஒர் இடத்தில் ஜீவித்துக் கொண்டிருக்கிறார். அவர் அப்படி இல்லையா? அது சரியே, அவர் இங்கே நாம் இந்த இரவில் அதனால்தான் கொண்டிருக்கிறார். இருந்து மகிழ்ச்சியுடன் இருந்து கொண்டிருக்கிறோம். 1d. மேலும் நேற்று மாலை மோசமாக கொல்லப்பட்டிருப்பேன். அது கொஞ்சம் கடினமாக இருந்தது. கொஞ்சம் உங்களைப் புண்படுத்தும் என்பதால் நான் அதை செய்யவில்லை. ஆனால் இப்பொழுது உங்களுடைய வரிசையில் என்னை சேர்த்து கொண்டதனால் பல்வேறு ஸ்தாபனங்களுக்கு இடையில் நின்று கொண்டு''நாம் சகோதரர்களாக இருக்கிறோம்...'' என்று கூறிக்கொண்டு இயன்ற வரையில் நலமானதை செய்ய முயற்சித்துக் கொண்டிருக்கிறேன். கிறிஸ்துவின் சரீரத்துடன் ஒன்றாக இணைவதற்கு தேவன் ஏதாவது செய்யும்படியாக என்னை அனுமதிப்பார் என்று நான் நம்புகிறேன். எனக்குத் தெரிந்த வரையில் அந்த சரீரம் ஒரு பிணியற்ற சரீரம் என்றே நான் நினைக்கிறேன். ஆனால் அந்த மகத்தான தெய்வீக சுகமளித்தல் கிறிஸ்துவின் சரீரத்தில் இருந்து கொண்டிருக்கும் ஒரு நபரை குணப்படுத்துவதற்கு சரியாக இப்பொழுது செய்யப்படலாம். அது என்ன ஒரு அற்புதமான நேரமாக இருக்கும், மீண்டும் அந்த அசுசா வீதி பேரணியில் நாம் அனைவரும் ஒன்றாக வருவதாக இருக்கும். நாம் இருக்க வேண்டும் என்று இயேசு ஜெபித்தார். அது நிறைவேறுவதைக் காண நான் மிகவும் மகிழ்ச்சி உள்ளவனாக இருக்கிறேன். மேலும் நான் அப்படி கூறுவதற்கு காரணம், சகோதரி மெக்ஃபர்சன், மற்றும், திருமதி உட்வொர்த்-எட்டர், மற்றும் மிஸ்டர் பாஸ்வொர்த், மற்ற ஆரம்ப கால பெந்தகோஸ்தே குழுவினர் பல வருடங்களுக்கு முன்பு நடத்திய கூட்டங்களின் சரித்திரத்தை நான் படித்தேன். பின்பு நான் அது பார்ப்பதற்கு என்னுடைய சொந்த சபையில் இருப்பதை போல் இருந்தது. நான் கூறின அந்த "கருப்பு ஆடுகள்.."... ஒரு உண்மையான, பரிசுத்தம் நிறைந்த வாழ்க்கையால் நிரப்பப்பட்டிருந்ததை நான் நம்பினேன். பின்பு அங்கே அவர்கள் அதற்காக நின்றபோது அது ஒரு கையுறை போல் பொருந்தியது. பிறகு நான் இங்கே அந்த வரிசைக்குள் வந்து பார்க்கும் போது அது நழுவி அப்பால் சென்று கொண்டிருந்ததை பார்க்க துவங்கின போது அது மோசமாக என்னை அசைத்தது. உங்களைப் பிடிக்கவில்லை என்பதற்காக அல்ல, நான் உங்களை நேசிப்பதால் தான் அந்த வெட்டுகிற காரியங்களை கூறுகிறேன் அது சரி. தேவனுக்கு முன்பாக ஒரு பெரிய மகத்தான அணியாக சீயோனை நோக்கி அணிவகுத்து சென்று கொண்டிருக்கிறோம். மேலும் எதிரியானவன் இங்கே எழும்பிக் குதித்துக் கொண்டிருப்பதையும் உலகமயம் - சபைக்குள் ஊர்ந்து சென்று கொண்டிருப்பதையும் நான் பார்க்கும் போது நான் வெறுமனே அமைதியாக இருந்து கொண்டிருக்க முடியாது. அது எல்லாம் சரியே. முன்னதாகவே இதை சீக்கிரம் செய்திருக்க வேண்டும் என்று நான் அர்த்தப்படுத்தவில்லை. நான் உங்களுக்கு நன்றி மட்டுமே சொல்ல விரும்புகிறேன். மிக்க நன்றி. 1e. வெட்டுவது சில நேரங்களில் வலியை உண்டுபண்ணுகிறது. ஆனால் ஒரு வேளை அதன் மீது ஒரு சிறிய வெளிச்சம்..... பயங்கரமான நோயின் அறிகுறிகள் இருக்குமானால் நீங்கள் உங்களுக்கு உங்களுக்கு ஒரு அறுவை சிகிச்சை செய்து தான் ஆக வேண்டும். ஆகவே நீ அங்கு செல்கிறாய். மேலும் அந்த மருத்துவர் கொஞ்சம் உன் முதுகில் தட்டிக் கொடுத்து "இங்கே பார், அருமையான கூட்டாளியே....? நீ நன்றாக "இங்கே இருக்கிறாய். நீ ஒரு அருமையான கூட்டாளியாக இருக்கிறாய்" என்று கூறி விட்டு அதை சரி செய்யாமல் "நீ வெளியே போகலாம்" என்று கூறினால் நீங்கள் அந்த மருத்துவரை பாராட்டுவீர்கள் என்று நான் நம்பமாட்டேன். ஆனால் அந்த மருத்துவர் பரிசோதித்து மேலும் அதன் காரணம் எங்கே என்று பார்த்து அதில் வலி இருந்தாலும் அவர் அதை வெட்டி வெளியே எடுப்பார் (பாருங்கள்?), அவர் ஒரு அருமையான மருத்துவராக இருப்பார். ஆகவே அந்த காரணத்தை அறிந்து புற்றுநோயை அங்கிருந்து வெட்டி எடுத்து விடுவார். அது அப்படித்தானே? அதன் பின்பு நாம் எல்லோரும் ஒரு பெரிய அணியாக முன்னேறிச் செல்ல முடியும். நீங்கள் இப்படிப்பட்ட ஒரு எந்த ஒரு பயணங்களில் எனது இருக்கிறீர்கள் அன்பான குழுவாக குறிப்பிட்ட குழுவில் உள்ள ஜனங்களின் மீது பரிசுத்த ஆவியானவர் விழுந்து அசைந்து செல்லாமல் இருந்ததை ஒரு போதும் நான் உணராமல் இருந்ததில்லை. நான் உங்களை விட்டு சென்று பத்து மணிக்கு இரயிலைப் பிடிக்க வேண்டும்: எனக்கு மற்றொரு கூட்டத்திற்கு அழைப்பு வடக்கு பாகத்திலிருந்து வந்து கொண்டிருக்கிறது. நான் உங்களை விட்டுச் செல்ல வேண்டும். ஆனால் லாஸ் ஏஞ்சல்ஸ் பட்டிணத்தில் இதுவரை நடந்த கூட்டங்களில் மிகவும் அதிகமான வெற்றியை கொண்ட இந்த கூட்டத்தில் தேவனுடைய ஆசீர்வாதங்கள் அனைத்தும் உங்களுக்குக் கிடைக்க வேண்டும் என்று வாழ்த்துகிறேன். மேலும் நான் உங்களுக்காக தொடர்ந்து ஜெபிப்பேன், நீங்கள் எனக்காக வேண்டிக் கொள்ளுங்கள். ஆகவே பரலோகத்தில் இந்தப் பக்கம் மீண்டும் ஒரு போதும் சந்திக்க முடியவில்லை என்றால் சில நாட்களில் அங்கே மேலே சந்திப்போம். தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. 1f. ஆசீர்வதிக்கப்பட்ட பழைய வேதாகமம் எனக்கு முன்னால் இருக்கிறது, சிறிது அவருடைய வார்த்தையை படிக்கும் விதமாக நான் அவருடைய வார்த்தையை வாசிக்க விரும்புகிறேன். ஏனென்றால் என்னுடைய வார்த்தை தவறிப்போகலாம் ஆனால் அவருடைய வார்த்தை தோல்வி அடையாது. மேலும் நான் ஒரு போதகராக இருந்து கொண்டிருக்கவில்லை, தேவன் என்னை ஒரு போதகராக இருக்கும்படி அழைத்திருக்கிறார் என்பதை நான் நம்பவில்லை. நான் வியாதியஸ்தர்களுக்காக ஜெபம் செய்கிறேன். அது தான் என்னுடைய ஊழியம் என்று உங்களுக்கு தெரியும். மேலும் என்னால் இரண்டு காரியங்களை சரியாக செய்ய இயலாது. நான் குறைந்த கல்வி உடையவன், நான் அறிவு ஞானம் இவற்றில் குறைவுள்ளவன். ஆகவே தேவன் வியாதியாக உள்ள அவருடைய பிள்ளைகளுக்காக ஜெபிக்க அனுமதித்திருக்கிறார். அது என்னுடைய ஊழியமாக இருந்து கொண்டிருப்பதை நீங்கள் அறிவீர்கள். அவர் அதை செய்ததற்காக நான் மிகவும் சந்தோஷமாக இருக்கிறேன். ஆனால் நான் சில காரியங்களை செய்வதற்கு அவர் எனக்கு கொடுத்திருக்கிறார். நான் ஏதாவது செய்ய வேண்டும். அர்னால்டு வான் வின்க்கல்ட் (Amold Van Winkorlied) என்பவரைப் பற்றி நான் கூறியதைப் போல "உங்களிடம் என்ன இருக்கிறதோ, உங்களிடம் இருப்பதைக் கொண்டு, உங்களால் எல்லாவற்றையும் செய்ய முடியும்''. ஆகவே அப்படியே உங்களுக்கு கொடுக்கப் பட்டிருக்கிற உத்தியோகத்தில் உண்மையாக இருங்கள். இன்றிரவு நான் இங்கு நின்று கொண்டிருப்பது இங்கே தேவனுக்கு முன்பாக அமர்ந்திருக்கின்ற உண்மையான மனிதர்கள் மற்றும் உண்மையான ஊழியக்காரர்கள் என்னை நேசிக்கிறார்கள், எனக்குப் போதுமானவர்களாக எனக்குப் பின்னால் அவர்களுடைய இருக்கைகளில் இருந்து கொண்டு கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் இரத்தத்தை கிரையம் கொள்வதற்காக மேலே இங்கே அமர வைத்திருப்பது நிச்சயமாகவே என்னை தாழ்மையுள்ளவனாக உணரும்படி செய்து கொண்டிருக்கிறது. ஆகவே தேவன் தாமே என்னுடைய சகோதரர்களை ஆசீர்வதிக்கும்படியாக நான் ஜெபிக்கிறேன். எப்பொழுதும் அதைச் செய்வதற்கு நான் மகிழ்ச்சி உள்ளவனாக இருப்பேன். ஆகவே, நான் என்னுடைய பிரசங்கத்தில் எப்போதும் என்னை "நான் ஒரு உதிரி சக்கரம்'' என்று கூறுவேன். உங்களுக்கு ஒரு சமதளம் இருந்தால் மட்டுமே பயன்படுவதாக இருக்கும். ஆனால் நமக்கு இப்பொழுது நிச்சயமாகவே எந்த ஒரு சமதளமும் நாம் பெற்றிருக்கவில்லை. நிச்சயமாகவே நாம் பெற்றிருக்கவில்லை. ஆகவே அவர்கள் அப்படிப்பட்ட ஒரு சாலையில் உதிரி சக்கரமாக செல்ல கிருபையால் என்னை அனுமதித்தனர். ஆகவே கர்த்தர் உங்களை உண்மையாகவே நன்றாக ஆசீர்வதிப்பாராக. 1g. நான் அவருடைய வார்த்தையை வாசிப்பேன் என்றால், அவர்களுக்கு கிருபை இருக்குமானால் இங்கே நின்று கொண்டு நான் வாசிக்கட்டும், மேலும் நான் "வானமும் பூமியும் ஒழிந்து போகும் ஆனால் அவருடைய வார்த்தை ஒழிந்து போகாது" என்று வாசிப்பேன் என்றால், அது எப்படியும் எதையாவது கொண்டு வந்து தேவனுடைய பிள்ளைகளை அது போஷிக்கும். இப்பொழுது, பரிசுத்த யோவான் எழுதின புத்தகம் முதல் அதிகாரம் 29-ம் வசனத்திலிருந்து ஒரு பகுதியை வாசிக்க விரும்புகிறேன். (யோவான் 1:29-32). மறுநாளிலே யோவான் இயேசுவை தன்னிடத்தில் வரக்கண்டு: இதோ உலகத்தின் பாவத்தைச் சுமந்து தீர்க்கிற தேவ ஆட்டுக்குட்டி எனக்குப்பின் ஒருவர் வருகிறார், அவர் எனக்கு முன்னிருந்தபடியால் என்னிலும் மேன்மையுள்ளவர் என்று நான் சொன்னேனே, அவர் இவர் தான். நானும் இவரை அறியாதிருந்தேன், இவர் இஸ்ரவேலுக்கு வெளிப்படும் பொருட்டாக, நான் ஜலத்தினாலே ஞானஸ்நானங் கொடுக்க வந்தேன் என்றான். பின்னும் யோவான் சாட்சியாக சொன்னது: ஆவியானவர் புறாவைப் போல வானத்திலிருந்திறங்கி, இவர் மேல் தங்கினதைக் கண்டேன். தேவன் தாமே இந்த வார்த்தையோடு அவருடைய ஆசீர்வாதங்களைக் கூட்டுவாராக. 1h. தேவன் இந்த உலகத்தில் அவருடைய குமாரனை பிரதிநிதியாக தெரிந்து கொண்ட இந்த காரியத்தை நினைக்கும் போது அது ஒரு விசித்திரமான காரியமாக இருக்கிறது. அவர் ஆட்டுக்குட்டி என்று அழைக்கப்படும் ஒரு உயிரினத்தின் மூலமாக தன்னை பிரதிநிதித்துவப்படுத்தியதை அவர் ஏன் தன்னை ஆட்டுக்குட்டி என்று அழைத்துக் கொள்ள வேண்டும் என்று நாம் அநேகமுறை ஆச்சரியப்படுகிறோம். பூமியில் உள்ள எல்லா உயிரினங்களிலும், மிருகங்களிலும் ஆட்டுக்குட்டி மட்டுமே ஒரு சாந்தமான ஒன்றாக இருக்கிறது. ஒரு ஆட்டுக்குட்டியை விட சாந்தமான ஒன்று அங்கே எதுவும் இல்லை. ஆகவே அந்த வைதீக யூத சபையை சார்ந்தவர்கள், அவர்களுடைய பாவங்களுக்குப் பரிகாரமாக ஆட்டுக்குட்டியை பலி செலுத்த வேண்டும் என்று அறிந்திருந்தனர். பாவத்திற்கான தீர்வு மரணம் அல்லது மரணத்தின் தண்டனையை தேவன் அவர்கள் மேல் சுமத்தியிருந்தார் என்றும் அறிந்திருந்தனர். மேலும் ஏதாவது ஒன்று மரித்து இரத்தம் ஜீவனைக் கொடுக்க வேண்டும் என்றும். அந்த ஜீவன் இரத்தத்தில் இருக்கிறது என்றும் எல்லோரும் அறிந்திருந்தனர். அவர் தேவனுடைய ஆட்டுக்குட்டியாகவும், தேவனுடைய குமாரனாகிய இயேசு கிறிஸ்துவாகவும் இருந்தார். ஆகவே தேவன் மரியாளின் கர்ப்பப்பைக்குள் பரிசுத்த ஆவியினால் நிழலிடப்பட்டு ஒரு இரத்த அணுவுக்குள் தன்னை சிருஷ்டித்துக் கொண்டு அந்த ஒரே பேரான குமாரனாகிய இயேசு கிறிஸ்துவை கொண்டு வந்தார். மேலும் ஜீவனானது இரத்தத்தில் இருந்து கொண்டிருக்கிறது, ஆகவே தான் குற்றவாளியாக இருந்து கொண்டிருக்கிற ஒரு பாவியானவன் ஒன்றுமே அறியாத ஒரு ஆட்டுக் குட்டியின் ஜீவனை எடுத்து பலியாக செலுத்த முடிந்தது. இப்பொழுது அதன் காரணம், வந்து கொண்டிருக்கிற அந்த உண்மையான தேவ ஆட்டுக் குட்டிக்கு ஒரு பாவனையாக இருந்தது. ஆகவே அது பாவத்தை மூடியிருந்தது, பாவத்தை எடுத்து போட இயலவில்லை, ஏனென்றால் இரத்தத்தில் இருந்த அந்த ஜீவனானது உடைக்கப்பட்ட பிறகு, ஆராதிப்பவர் மேல் திரும்பவும் செல்ல முடியவில்லை, ஏனெனில் ஆராதனை செய்கிறவன் ஒரு ஆத்துமாவை கொண்ட மனிதனாக இருந்தான். ஆகவே அந்த பிராணியிடம் இருந்து சென்ற ஜீவன் வெறுமனே ஒரு மிருகத்தினுடைய ஜீவனாக மட்டுமே இருந்தது. அந்த மிருகத்தினுடைய ஜீவன் மனிதனுடைய ஜீவனோடு ஒத்து போக முடியவில்லை. எனவே அப்படியே ஆராதிப்பவன் அதே மனசாட்சியோடு பாவம் செய்ய விருப்பம் உடையவானகவே, உள்ளே எந்த நிலையில் வந்தானோ அதே போல் வெளியே செல்கிறான். அது எல்லாமே பாவனையாக இருக்கிறது. ஆனால் ஆராதிப்பபவன் ஒரு முறை கிறிஸ்துவின் இரத்தத்தினால் சுத்தமாக்கப்படும் போது அவனிடம் பாவத்தின் மனச்சாட்சி இனிமேலும் இல்லை ஏனெனில் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் இரத்தத்தில் இருந்து வெளியேறின. அந்த ஜீவன் அவருடைய சொந்த ஜீவனே தவிர வேறு எதுவுமில்லை, அது திரும்பிச் சென்று விசுவாசிப்பவனை அவருடைய ஐக்கியத்திற்குள் கொண்டு வருகிறது. 1i. எனவே அந்த அழகான ஒன்றுமறியாத ஆட்டுக்குட்டி மகத்தான ஒரு உயிரினமாக இருக்கிறது. அந்த ஆட்டுக்குட்டியின் இயல்பை பார்ப்பதற்கு இன்றிரவு நமக்கு அதிக நேரம் கிடைக்க வேண்டும் என்று விரும்புகிறேன். இது அருமையாக இருக்கிறது. ஒரு ஆட்டுக்குட்டி. தேவன் நம்மை ஆட்டுக்குட்டிகளுக்கு ஒப்பிடுகிறார். ஆட்டுக்குட்டியானது தனக்கென்று ஒரு சொந்த வழியை கொண்டிருக்க முடியாத ஒரு பிராணியாக இருக்கிறது. மேலும் சீக்கிரமாகவும், விரைவாகவும் நம்மால் நம்முடைய சொந்த வழிகளை கொண்டிருக்க முடியாது என்று காண்கிறோம் (நாம் சுயமாக நிலைத்திருக்க முடியாது; நாம் அவருடைய கரங்களுக்குள்ளாக மற்றும் அவருடைய வழிகாட்டுதலின் மீதே சார்ந்து கொள்ள முடியும்) விரைவில் நாம் ஆட்டுக்குட்டிகளாக மாறுவோம். இப்பொழுது அங்கே ஒரு சிறிய பையனைக் குறித்த ஒரு காரியம் இருக்கிறது. ரோந்து செல்லும் போது ஒரு நாள் நான் ரோந்து சென்ற போது நினைவில் இருக்கிறது. கீழே பள்ளத்தாக்கில் உள்ள ஒரு குழியில் இருந்து ஒரு சத்தம் வருவதைக் கேட்டேன். அது ஒரு சிறிய ஆட்டுக்குட்டியாக இருந்தது. வயதான அந்த தாய் ஆடு கூட்டத்தோடு உணவு தேட அப்பால் போய் விட்டது. அந்த சிறிய ஆட்டுக்குட்டி உதவியற்ற நிலையில் இருந்தது. மேலும் நான் எப்படியோ அதை எடுத்து சுற்றி வைத்துக் கொண்டு போய் அதனுடைய தாயிடம் கொண்டு போய் விட்டேன் அது எப்படியாக என்னுடைய கரங்களுக்குள் படுத்துக் கொண்டது., ஆகவே, "ஒ தேவனே ஒரு நாளிலே நீர் என்னை எடுத்து உமது கரங்களுக்குள்ளாக என்னை வைத்துக் கொள்வீராக" என்று நினைத்தேன். 1j. ஆகவே ஆட்டுக்குட்டிக்கு ஒரு மகத்தான அர்த்தம் உண்டு. ஓரளவு நான் பாலஸ்தீனத்தில் அல்லது கிழக்கு தேசங்களில் இருந்திருக்கிறேன். மேலும் எப்பொழுதாவது நீங்கள் கிழக்கு தேசங்களுக்கு சென்றிருப்பீர்கள் என்றால் வேதாகமம் எப்படி ஒரு புதிய புத்தகமாக மாறியது என்பதை நீங்கள் காண்பீர்கள். எப்பொழுதுதாவது அதை படித்திருப்பீர்களானால் கிழக்கத்திய உவமைகள் மற்றும் அந்நாட்களில் அவர்கள் கொண்டிருந்த பழக்கவழக்கங்களையும் பற்றி எழுதப்பட்ட கிழக்கத்திய புத்தகமாக அது இருக்கிறது. அவர்கள் அதை மாற்றாமல் இன்றும் கூட அவற்றை அப்படியே வைத்திருக்கிறார்கள். ஒருநாள் நானும் ஒரு மனிதரும் ஒரு சிறிய பிரிட்டிஷ் ஜீப் வண்டியில் சவாரி செய்து கொண்டிருந்தோம். மேலும் ஒரு விசில் ஊதப்படும் சத்தத்தைக் கேட்டேன். ஆகவே ஒவ்வொன்றும் நின்று விட்டது. எல்லா வாகனங்களும் நின்று விட்டன. "என்ன விஷயம்?" என்று கேட்டு கவனித்தேன். எனக்கு ஆச்சரியமாக இருந்தது. ஆடுகளை மேய்க்கும் ஒருவன் ஒரு கூட்ட ஆடுகளை வழிநடத்தி கடந்து வந்து கொண்டிருந்தான். ஆகவே நான் "நல்லது, ஏன்..." என்று கேட்டேன், அந்த ஆடுகளும் அந்த மேய்ப்பனும் முழுவதுமாக இங்கே கடந்து செல்லும் வரையிலும் ஒவ்வொன்றும் நின்று கொண்டிருக்கும்" என்று அவர் கூறினார். அங்கே, காய்கறிகளை வைத்துக்கொள்ள இன்றைய நாளில் நாம் கண்டுபிடித்திருக்கும் குளிரூட்டப்பட்ட பெட்டிகள் (Ice Boxes) காரியங்களை அவர்கள் வைத்துக் போன்ற இதைப் கொண்டிருக்கவில்லை. காய்கறிகள் மற்றும் பொருட்கள் போன்றவைகளை தெருக்களில் வைத்திருந்தனர். ஒரு மேய்ப்பன் கீழே வந்து தெருவின் மத்தியில் நடந்து சென்று அவனுடைய ஆடுகளை வழி நடத்திச் சென்று கொண்டிருப்பான். கயிறுகளின் மூலமாக அல்ல, வெறுமனே பார்வையால் மட்டுமே அவைகள் அவனை தொடர்ந்து சென்று கொண்டிருக்கும். ஆகவே நான் நின்று விட்டேன். மேலும் நான் வியந்து கொண்டிருந்தேன். அந்த மேய்ப்பன் நடந்து செல்லும் போது அவன் ஒரு பக்கமாக சில அடிகள் சென்று பின்பு பாதையில் திரும்பும் போது அதைப் போலவே அந்த ஆடுகளும் திரும்பி வந்து அந்த மேய்ப்பவனுக்குப் பின்னால் தொடர்ந்து சென்று கொண்டிருக்கும். "என்னுடைய ஆடுகள் என் சத்தத்தை அறிந்திருக்கின்றன' ஆகவே நான் வியந்து என்னுடன் இருந்த அந்த நல்ல மனிதனிடம் ஏன் அவைகள் பச்சை நிறத்தில் இருக்கும் அந்த பேரிக்காய்களை (பார்ப்பதற்கு அழகான) உண்பதற்கு ஒரு புறமாக திரும்பவில்லை. மேலும் அந்த காரியங்கள் அந்த ஆடுகளை கவர்ந்திழுக்கவில்லை?" என்று கேட்டேன். "மேய்ப்பன் முதலில் அவற்றில் ஒரு சிறு பகுதியை தொடாத வரையில் அவைகள் எதையும் தொடுவதில்லை" என்று கூறினார். ஓ... நான் அங்குதான் நீங்கள் இருக்கின்றீர்கள். தேவனுடைய ஆடுகளாகிய நாம் இப்படிப்பட்ட காரியங்களில் கவனமாக இருப்போமானால் நம்முடைய சபைகளிலும், மற்ற காரியங்களிலும் வேறுபட்ட மன உளைச்சல்களையும் நாம் கொண்டிருக்க மாட்டோம். 1k. சிறிது நேரத்தில் நான் மற்றொரு மேய்ப்பனைப் பார்த்தேன். அவர் ஒரு வயலில் மேயத்துக் கொண்டிருந்தார். மேலும் அங்கே கழுதைகள், ஒட்டகங்கள் ஆடுகள், செம்மறி ஆடுகள் எல்லாம் ஒன்றாக இருந்தன. "நல்லது, அந்த மேய்ப்பன் எல்லாவற்றையும் ஒன்றாக சேர்த்து மேய்ச்சலுக்கு விட்டிருந்தான். ஒரு மேய்ப்பன் வெறுமனே ஆடுகளை மட்டுமே மேய்த்து வருகிறவன்" என்று நினைத்தேன். என்று கூறினேன். "இல்லை மேய்ப்பர்களால் எந்த வகையான ஒரு பிராணியையும் மேய்க்க முடியும்" என்று அவர் கூறினார். "ஆனால் "ஏன் எல்லாம் ஒன்றாக சேர்ந்து ஒரே வயலில் தானே சாப்பிடுகின்றன என்று கூறினேன். "சகோதரர் பிரன்காம் அவர்களே, இது குறித்து ஒரு காரியம் விசித்திரமாக இருக்கிறது. அந்த மேய்ப்பபன் நாள் முழுவதும் அவைகளை ஒழுங்குபடுத்தி ஒவ்வொன்றையும் கவனித்துக் கொண்டிருப்பான், ஆனால் இரவு நேரம் வரும் பொழுது, அந்த கழுதைகள், மற்றும் ஒட்டகங்கள், வெள்ளாடுகள் வயல் வெளியில் போய் விடுகின்றன. ஆனால் அந்த செம்மறியாடுகளை மட்டும் எடுத்து அந்த மேய்ப்பபன் தொழுவத்திற்குள் கொண்டு வருகிறான். ''...நான் ... சகோதரனே நான் ஒரு செம்மறி ஆடாக இருப்பதையே விரும்புகிறேன் நீங்களும் அப்படித்தானே?" என்று கூறினேன். யோவான் 10-ம் அதிகாரத்தில் "நானே ஆட்டுத் தொழுவத்திற்கு வாசல்" என்று அவர் கூறியதை குறித்து அடிக்கடி நான் வியந்ததுண்டு. எப்படி அவர் ஒரு மனிதனாக இருந்து கொண்டு இன்னுமாக ஒரு வாசலாக இருக்க முடியும்?' ஆகவே இந்த அருமையான மனிதனிடத்தில் கேட்டேன். மேலும் அவர் "நீங்கள் பாருங்கள் சகோதரர் பிரன்காம் அவர்களே, இரவு நேரம் ஆடுகள் வரும் போது அந்த மேய்ப்பன் ஒவ்வொரு ஆட்டையும் எண்ணி முடிக்காமல் ஒரு போதும் படுக்க செல்லமாட்டான். அதன் பிறகு அவன் படுக்கும்போது வாசலுக்கு குறுக்காகப் படுத்துக்கொள்வான். ஆகவே அந்த ஆடுகள் ஒரு போதும் மேய்ப்பனை தாண்டிச் செல்ல முடியாது. அல்லது மேய்ப்பனைத் தாண்டி ஒநாய் மற்ற எதுவும் ஆடுகளிடம் வர முடியாது" என்று அவர் கூறினார். "நான் ஒரு செம்மறி ஆடாக இருப்பதில் இந்த நேரம் மிகவும் மகிழ்ச்சி உள்ளவனாக இருக்கிறேன'' என்றேன். சோதனைகள் வரலாம் போகலாம் ஆனால் ஒரு செம்மறி ஆடாக இருக்கும் போது, சகோதரனே அந்த மகிமையான ஒரு நாளில் அந்த சூரியன் மறைந்து கீழே சென்று கொண்டிருக்கும் போது அவர் நம்மை எடுத்து அந்த ஆட்டுத் தொழுவத்திற்குள் கொண்டு சென்று கொண்டிருப்பார். அதற்காக நான் மகிழ்ச்சியுடன் இருக்கிறேன். ஆகவேதான் தேவன் தம்முடைய நேசகுமாரனை சாந்தமும், மென்மையும் கொண்ட ஒரு செம்மறி ஆடாக பிரதிநிதித்துவப்படுத்த அனுமதித்தார். அதன்பிறகு தேவன், வானத்தில் பறந்து கொண்டிருந்த சாந்தமுள்ள ஒரு பறவையான புறாவின் சாயலாக பூமிக்கு வந்து தன்னை பிரதிநிதித்துவப் படுத்தினார். புறாவானது தனித்துவம் வாய்ந்த ஒரு பறவை ஆகும். அது மற்ற எல்லாப் பறவைகளைக் காட்டிலும் வித்தியாசமான ஒரு பறவையாக இருக்கிறது. அநேக சமயங்களில் வேதாகமத்தில் அது பரிசுத்த ஆவியைப் பிரதிநிதித்துவப் படுத்துவதை பார்க்கிறோம். ஆகவே அந்த புறாவனது அது சமாதானத்தின் அடையாளமாகவும், மேலும் அமைதியின் அற்புதமான அடையாளமாகவும் இருப்பதை நாம் காண்கிறோம். (ஒலி நாடாவில் வெற்றிடம்) வெள்ளமானது பூமி முழுவதும் நியாயத்தீர்ப்பை கொண்டு வந்த பிறகு அந்தப் புறா பூமியின் மீது எங்கும் அமைதி இருந்ததை ஒரு ஒலிவ இலையை தன்னுடைய அலகில் கொத்திக் கொண்டு திரும்பி வந்து சமாதானத்தைப் பிரதிபலித்துக் கொண்டிருந்தது. புறாவைக் குறித்து நாம் அதிக நேரத்தை செலவு செய்ய முடியும். இன்னுமாக காகம் மற்றும் தோட்டி இப்படிப்பட்ட பறவைகளோடு பறந்து கொண்டிருந்தாலும் புறாவால் காகம் உண்ணும் உணவை அதனால் சாப்பிட முடியாது. ஏனென்றால் அது வித்தியாசமாக உருவாக்கப்பட்ட பறவையாகும். அதற்கு பித்தப்பை இல்லை. ஆகவே அந்த தோட்டிப் பறவை உண்ணும் உணவை அதனால் உண்ண முடியாது. சுத்தமான மற்றும் தூய்மையான உணவு அப்படிப்பட்டவைகளை மட்டுமே அதனால் உண்ண முடியும். அந்த புறாவைப் போல தன் இதயத்தை வைத்துக் கொண்டிருக்கும் ஒரு கிறிஸ்தவனுக்கு அது எப்படிப்பட்ட மாதிரியாக இருக்கிறது. உலகத்தின் மோசமான காரியங்களின் மேல் அவனால் நின்று கொண்டிருக்க முடியவே முடியாது. பாருங்கள்? அவனுக்கு எந்த பித்தப்பையும் இல்லை, எந்த கசப்பான காரியங்களும் அவனுக்கு கிடையாது. அவன் தாழ்மையுள்ளவனாகவும் பணிவுள்ளவனாகவும் இருந்து கொண்டிருக்கிறான். ஒரு புறாவின் சத்தத்தை விட அது என்ன ஒரு இனிமையாக இருக்கிறது? 2. இந்த இரவில் என்னுடைய மனம் பல மைல்களுக்கு அப்பால் உள்ள அந்த மலைப்பகுதியை நோக்கி திரும்பிச் சென்று கொண்டிருக்கிறது என்னுடைய நேசமிக்க மனைவி இருக்கின்ற அங்கே அந்த இடத்தில் ஒரு அயைாளம் குறிக்கப்பட்டிருக்கிறது. அவளுக்கு இருபது வயது இருக்கும் போது அவள் என்னை விட்டு கடந்து சென்றுவிட்டிருந்தாள். என்னுடைய எட்டுமாத சிறிய குழந்தை அருமை சாரோன்-ஐ அவளுடைய கரத்தின் மீது வைத்து இருவரையும் ஒன்றாக அடக்கம் செய்தேன். மாலை வேளையில் வேலையில் இருந்து வீட்டுக்கு வருவேன். நான் வீட்டிற்குள் வந்து கவனிப்பேன். நாங்கள் அங்கே ஒரு சிறிய அடுப்பை கொண்டிருந்தோம், வீட்டு வேலைக்கு சென்றிருந்த போது ஒரு டாலர் எழுபத்தைந்து சென்ட் விலை கொடுத்து அதை வாங்கினோம். நான் அதைக் கவனிப்பேன் அது ஒன்றும் அதிகம் இல்லைதான் அவள் சமைப்பாள். நாங்கள் பத்து சென்ட் ஆனால் அதில் தான் கடைக்குச் சென்று தண்ணீர் சுடவைப்பதற்கு சிறிய கொதிகலன்களை, ஒருவேளை அவைகளில் இருந்து ஒரு சிறிய பகுதி உடைந்து விழுந்திருக்கலாம். அதனால் அதை மலிவான விலைக்கு எங்களால் வாங்க முடிந்தது. அது ஒன்றும் அதிகம் இல்லை தான். ஆனால் அவள் அதை தொட்டு பயன்படுத்தியிருந்தாள். 3. என் குழந்தை நான் அந்த தொட்டிலுக்கு சென்று அங்கே பார்ப்பேன் சென்றுவிட்டிருந்தாள். பல நேரங்களில் என்னால் சாப்பிடக்கூட முடியாமல் இருப்பேன். நானே ஒரு ரொட்டியை செய்து எடுத்துக் கொண்டு அங்கேயே அமர்ந்திருப்பேன். எனவே நான் என் காரில் ஏறி கல்லறைக்குச் சென்று என் காரை நிறுத்தி விட்டு இந்த உலகில் எனக்கு கொடுக்கப்பட்டிருந்த அந்த மிகவும் விலை மதிப்பு கொண்ட சரீரத்தை நினைத்துக் கொண்டு மேட்டில் உட்கார்ந்து அழுது கொண்டிருப்பேன். மேலும் தேவன் ஒரு அழகான காட்டுப் புறாவை அனுப்பி வைத்தார். சூரியன் கீழே மறைந்து கொண்டிருக்கும் போது அந்த புதரில் வந்து அமர்ந்து என்னிடம் கூவிக் கொண்டிருக்கும். ஒரு நாள் என்னுடைய இந்த வாழ்க்கை சூரியன் மறைந்து கொண்டிருக்கும்போது அதனுடைய ஒரு அடையாளமாக இருக்கும் என்று அதற்காகவே மீண்டும் வந்து அதை கவனித்துக் கொண்டிருப்பேன். அந்த இலைகளைப் பார்க்கும் போது அவள் என்னைக் கூப்பிடுவது போல் இருக்கும். நதிக்கு அப்பால் ஒரு தேசம் இருக்கிறது, அந்த இனிமையை நாம் என்றென்றும் அழைப்போம் விசுவாசத்தின் மூலம் மட்டுமே நாம் அந்த துறைமுகத்தை சேர்ந்து, அங்கே அழியாமையில் வாசம் செய்வோம். சில நாட்களில் அந்த தங்கத்தால் செய்த மணிகளை உனக்காகவும் எனக்காகவும் ஒலிக்க செய்வார்கள். 4. கவனிக்கிறீர்களா....? முதலில் அந்த அழியாத தன்மையில் எப்படியாக அவர் முன்னும் பின்னுமாக நடந்து என்னைத் தேற்றுவார், மேலும் சூரியன் மறைந்து கொண்டிருக்கும் போது என்னை அவர் கூப்பிடும் அந்த இனிமையான இசையை அமர்ந்து கேட்டுக் கொண்டிருப்பேன். தேவன், அவர் கீழே இறங்கி வந்தபோது, அநேகர் இந்த பரிசுத்த வேதாமத்தை புறக்கணித்தனர், ஆனால் என்னைப் பொறுத்த மிகச்சிறந்ததாக இந்த வேதாகமம் வரையில் வேதங்களிலேயே இருக்கின்றது. தேவன் ஒரு புறாவின் வடிவத்தில் கீழே இறங்கி ஒரு ஆட்டுக்குட்டியின் வடிவத்தில் அவரது குமாரனின் மீது அமர்ந்த போது வானமும் பூமியும் கட்டித் தழுவிக் கொண்டன. ஏன் அவர் அந்த ஆட்டுக்குட்டியையும், அந்தப் புறாவையும் தெரிந்து கொண்டார்? ஏனென்றால் புறாவால் ஆட்டுக்குட்டியைத் தவிர வேறு எந்த ஒன்றுடனும் ஒத்துப்போக முடியாது. அவைகளின் இயல்புகள் ஒன்றாக இருப்பதனால் அவைகள் இரண்டு மட்டுமே ஒன்றாக ஒத்துப் போக முடியும். அவைகளுடைய இயல்புகள் சாந்தம், தாழ்மை, மற்றும் பணிவுள்ளதாக இருப்பதனால் தான் அவைகள் ஒன்றாக சேர்ந்து வாசம் செய்ய முடிகிறது. தேவனும் கிறிஸ்துவும் ஒன்றான போது ஆட்டுக்குட்டியின் மீது புறா இறங்கிய போது, வானமும், பூமியும் ஒன்றையொன்று முத்தமிட்டுக் கொண்டன. தேவனும், மனிதனும் ஒருவருக்கொருவர் ஒப்புரவாகிக்கொண்டனர். புறாவும், ஆட்டுக்குடடியும் ஒன்றாக ஆகிவிட்டன. 5. நான் சொன்னதைப் போல, அந்த காரணத்தினாலதான் அவைகளால் ஒன்றாக வாசம் செய்ய முடிந்தது.... இப்பொழுது, கர்த்தருடைய ஆவி ஒரு புறாவைப் போல வந்ததை அவன் பார்த்ததாக வேதம் கூறுகிறது. மேலும் "இதோ தேவ ஆட்டுக்குட்டி" என்று அவன் கூறினான். எனவேதான் அந்த ஆட்டுக்குட்டியின் மீது புறாவானது வந்து தங்க முடிந்தது ஆகவே அந்த "இணங்குதல்" எனக்குப் பிடிக்கும். இப்பொழுது அந்த ஆட்டுக்குட்டியானது ஒரு ஒநாயைப் போல சீறி ஏன், என்னவாயிருக்கும். அந்த புறாவானது பறந்து இருந்தால் சில நேரங்களில் சென்றிருக்கும். உங்களுக்குத் தெரியும், சபைகளில் இவ்வளவு பெரிய பிரச்சனைகளும் இருப்பதற்கு காரணம் என்ன என்று ஆச்சரியப்படுகிறேன். நாம் தேவனுடைய ஆட்டுக்குட்டிகளாக இருப்போம் என்றால் அந்த ஆட்டுக்குட்டிகளின் இயல்பை நாம் உடையவர்களாக இருக்க வேண்டும், அந்தப் புறாவானது தங்கி வாசம் செய்வதற்கு நாம் அதை எதிர் நோக்கினவர்களாக இருப்போம். அதை நீங்கள் நம்புகிறீர்களா? நான் அப்படி செய்வேன். 6. இப்பொழுது நாம் புறாவைப் பார்ப்போம் என்றால்....அது ஆட்டுக்குட்டியின் மீது தங்கியதற்கான காரணம் அவைகளின் இயல்புகள் ஒரே மாதிரியாக இருந்ததினால் தான். மேலும் அந்த புறாவானது ஒரு கிறிஸ்தவன் மீது தங்கியிருக்கும் காரணம் ஒரு ஆட்டுக்குட்டியாக அவன் இருக்கும் வரை அவன் மீது அவர் தங்கியிருப்பார். ஆனால் அவன் வித்தியாசமான ஒன்றை எடுக்கும் போது அந்த புறாவானது பறந்து சென்றுவிடும். இந்த ஆட்டுக்குட்டியானது முதலில் ஒரு களங்கமற்ற ஆட்டுக்குட்டியாக இருந்தது. அவர் ஒரு மாசற்ற ஆட்டுக்குட்டி என்று வேதாகமம் கூறுகிறது. மேலும் அந்த ஆட்டுக்குட்டியால் அதன் சொந்த முயற்சியில் சார்ந்துகொண்டு எங்கும் செல்ல முடியாது. ஒரு ஆட்டுக்குட்டியானது வழி நடத்தப்பட வேண்டும் அல்லது வழிகாட்டியால் மேய்க்கப்பட வேண்டும். நீங்கள் எப்பொழுதாவது ஆடுகள் வெட்டப்படும் இடத்திற்குச் சென்று வெட்டப்படுவதை கவனித்திருக்கிறீர்களா? அந்த ஆட்டுக்குட்டி.. செம்மறி ஆடு தானாகவே வெட்டப்படும் இடத்திற்கு செல்லாது. அங்கே ஒரு வெள்ளாடானது அவைகளை அந்த வெட்டப்படும் இடத்திற்கு வழிநடத்திச் சென்று கொண்டிருக்கும். ஆனால் அந்த கொல்லப்படும் இடம் வந்தவுடன் அது தடுப்புக்கட்டையை தாண்டி அந்த இடத்தை விட்டு குதித்துச் சென்று விடும். இப்பொழுது, அது ஒரு பிசாசின் மிகவும் வழக்கமான காரியமாக இருக்கிறது. தேவடைய ஆடுகளை அவன் நேராக கொலைக்களத்திற்கு வழி நடத்திச் சென்று விட்டு பின்பு அங்கிருந்து அவன் ஒதுங்கி வெளியேறி சென்று விடுவான். அது சரியே. ஆகவே எந்த ஒன்று உங்களை வழிநடத்திக் கொண்டிருக்கிறது என்பதில் கவனமாக இருங்கள். ஹா...ஹா... ஆமென். 7. அந்த செம்மறி ஆடு....கிறிஸ்துவே....... அவர் எவ்வளவு சாந்தமுள்ளவராக இருந்தார் என்பதைப் பாருங்கள். அவர் ஒருபோதும் தன்னுடைய சுயசித்தத்தின்படி எதையுமே செய்ய முயற்சிக்கவில்லை. "நான் என்னுடைய சித்தத்தின்படி செய்ய வரவில்லை, ஆனால் என்னை அனுப்பின பிதாவுடைய சித்தத்தை செய்யவே வந்தேன்" என்று அவர் கூறினார். அவரை அனுப்பின பிதாவானவர் அவரோடு சென்று கொண்டும், அவருக்குள்ளாகவும் இருந்து கொண்டிருந்தார். ஆகவே இப்பொழுது, "பிதா என்னை அனுப்பினதைப் போல நான் உங்களை அனுப்புகிறேன்'' என்று அவர் கூறினார். பின்பு அவர் ஒருபோதும் நம்மை மட்டுமே அனுப்பவில்லை. ஆனால் அவர் நம்முடன் சென்று கொண்டிருக்கிறார். மேலும் அவரைக் கவனியுங்கள், அவனைச் சுற்றிலுமாக இருந்து வழிநடத்திக் கொண்டு வருகிறார். ஒரு ஆட்டைப் போல அவன் தன்னுடைய சொந்த திறமையின் மீது சார்ந்திருக்கவில்லை. அவன் அந்த மேய்ப்பனுடைய திறமையின் மேல் சார்ந்தவனாக இருக்கிறான். அவன் அவனுடைய மேய்ப்பனிடம் எந்த ஒரு கேள்வியும் கேட்பதில்லை. வெறுமனே அவன் அவருடைய மேய்ப்பனுடன் அந்த ஆட்டைப் போல சென்று கொண்டிருக்கிறான். 8. நான் பையனாக இருந்த போது, பண்ணையில் ஆடு வளர்ப்பதை குறித்து கொஞ்சம் அனுபவம் எனக்கு இருந்தது. நாங்கள் செம்மறி ஆடுகளை எடுத்து மயிர் கத்தரிப்போம். நீங்கள் அவைகளை மேசையின் மீது பிடித்துக் கொள்ள வேண்டும். உங்களுக்கு ஒரு சிறிய இடம் இருக்கும் ஒரு சிறிய வளையத்திற்குள் அவைகளின் கால்களை கட்டுவார்கள். அவைகள் உதைத்து விட்டு சென்று விட முடியாது. அவைகளின் கம்பளி ரோமம் அனைத்தையும் கொடுத்து முடியும் வரை அமைதியாக படுத்துக் கொண்டிருக்கும். அப்படியே உதைக்காமல் அலறாமல் அவற்றை கத்தரித்துக் கொள்ள அனுமதித்துக் கொண்டிருக்கும். நான் என்ன அர்த்தத்தில் கூறுகிளேன் என்பதை நீங்கள் புரிந்து கொள்ள முடியும் என்று நம்புகிறேன். செம்மறி ஆடு அசையாமல் படுத்துக் கொண்டிருக்கும். இப்பொழுது ஒரு உண்மையான செம்மறி ஆடு அதனுடைய உரிமைகளை விட்டுக் கொடுக்கிறது. நம்முடைய சில கிறிஸ்துவ சகோதரிகள் உடைகளை எப்படி அணிந்து சென்று கொண்டிருக்கிருக்கின்றனர், மற்றும் சகோதரர்கள் எந்த உடைகளை அணிந்து சென்று கொண்டிருக்கிறார்கள் என்பதை குறித்து தான் நேற்று இரவு கூற முயற்சித்துக் கொண்டிருந்தேன். 9. ஒரு பெண்மணி, மற்றொரு பெண்மணிக்கு அருகில் அமர்ந்து கொண்டிருந்தாள். என்னுடைய நண்பனாக இருந்தாள். அவள் இன்று என்னை சந்தித்து இப்படியாக கூறினாள், "அங்கே ஒரு கதவு இருந்திருக்குமானால் நான் வெளியில் ஓடியிருப்பேன் என்று கூறினாள்". "அவர் தவறாக இருந்து கொண்டிருக்கிறார்" என்றாள். நல்லது .... "இதைச் செய்வதற்கு எங்களுக்கு உரிமை இருக்கிறது" என்று கூறுகிறாள் என்று அவள் கூறினாள் அது சரிதான். "சகோதரர் பிரான்காம் அவர்களே, கடைகளில் பெண்கள் அணியும் அப்படிப்பட்ட சிறிய உடைகளை விற்கிறார்கள். அது எங்களுடைய அமெரிக்காவின் சுதந்திரம் அது எங்களுடைய உரிமையாக இருக்கிறது'' என்று நீங்கள் என்னிடம் கூறலாம். ஆனால் ஒரு செம்மறி ஆடாக நீங்கள் இருப்பதற்கு உங்கள் உரிமையை விட்டுக் கொடுக்கத் தயாராக இருக்க வேண்டும். அதுவே அடுத்த காரியமாக இருக்கிறது. அது சரியே, "நாங்கள் விரும்புவோம் என்றால் சபையை சார்ந்து கொள்வோம். மேலும் நாங்கள் விரும்பினால் சிகரெட்டைப் புகைப்போம். அவைகளை விற்க அரசாங்கம் கூறுகிறது. ஆகவே அவர்கள் அதை விற்கிறார்கள். அதில் தவறு ஒன்றும் இல்லை, புகைப்பது எங்களுடைய அமெரிக்காவின் சுதந்திரமாக இருக்கிறது". என்று நீங்கள் கூறுகிறீர்கள். அது சரிதான். உரிமையை இழந்துவிட நீ ஆனால் உன்னுடைய சிகரெட் புகைக்கும் தயாராக இருக்கிறாயா? பாருங்கள் அது சரியே. 10. "அக்கம் பக்கத்தில் உள்ளவர்களை சந்திக்கிறோம். அவர்களுடன் நேரத்தை செலவிடுகிறோம் அது அருமையாக இருக்கிறது. மேலும் அது எங்களுடைய அமெரிக்காவின் சுதந்திரமாக இருக்கிறது. ஒரு சமுதாய மதுவை எடுத்துக் கொள்கிறோம். அது எங்களுடைய சுதந்திரம்" என்று கூறுகிறாய் ஆனால் சகோதரனை, உன்னுடைய பாவமுள்ள அந்த உரிமைகளை நீ இழந்து போக தயாராக இருக்கிறாய் என்றால் ரோமம் கத்தரிக்கப்பட்ட ஒரு செம்மறி ஆட்டைப் போல் இருப்பதை நான் தெரிந்து கொள்ள மாட்டேனா? நீ அதைச் செய்யமாட்டாயா? உன்னுடைய உரிமைகளை இழந்து விடு. உரக்க சத்தமிட்டு அதை உதைத்து தள்ளி விடாதே. செம்மறி ஆடு அப்படி செய்யாது. அது தாங்கள் வைத்திருக்கும் எல்லாவற்றையும் கத்தரித்துக் கொள்ளும்படி அப்படியே படுத்துக் கொண்டிருக்கும். நீங்கள் அசுசா தெருவுக்கு திரும்ப வேண்டுமானால் அப்படியே படுத்திருந்து உங்களை மயிர் கத்தரித்துக் கொண்டு அந்த எல்லா வழிகளிலும் வார்த்தையுடன் இருந்து அதை காணுங்கள். ஆம், ஐயா. அசுசா வீதி அனுபவத்திற்கு திரும்பும் வழி அதுவாகத்தான் இருந்து கொண்டிருக்கிறது. எல்லா காரியங்களிலிருந்தும் கத்தரித்துக் கொள்ள வேண்டும். 11. அது உன்னுடைய சுதந்திரம் என்று எனக்குத் தெரியும் ஏனென்றால் பாவத்தில் பிரிந்து அக்கிரமத்தில் உருவாக்கப்பட்டு, பொய் பேசும் இந்த உலகத்திற்கு வந்தாய். அது உனக்கு சொந்தமானதுதான், ஆனால் நீ ஒரு ஆட்டுக்குட்டியாக மாறுவதற்கு அதை விட்டுக் கொடுப்பாயா? அந்த ஆட்டுக்குட்டி சத்தமிடவில்லை. "அவர் அவருடைய வாயை திறக்கவில்லை வேதாகமம் சொல்கிறது. அவர் நிந்திக்கப்பட்ட போது அவர் திரும்ப நிந்திக்கவில்லை" என்று ஆனால் ஓ..... அந்த புறாவானது அந்த வேதகாமம் கூறுகிறது. ஆட்டுக்குட்டியின் மீது அமர முடிந்ததே அதன் காரணமாக இருக்கிறது. ஆனால் நாமோ, நமக்கு எதிராக யாராவது எதையாவது செய்து விட்டால் சட்டைக் காலரை எடுத்து சூடாகி விடுகிறோம். என்ன நடக்கும்? அந்த ஆட்டுக்குட்டி.....அந்த புறாவானது பறந்து சென்று விடும். பரிசுத்த ஆவியானவர் வெளியே சென்று விடுவார். நாம் ஏன் அந்த சமாதானத்தை பெற முடியவில்லை என்று பல நேரங்களில் நீங்கள் வியக்கலாம். அங்கே ஏதோ சில காரியங்கள் அந்தப் புறாவை அப்பால் எடுத்துச் சென்று விடுகிறது. அது சரியே. 12. சபைகள் வழக்கமாக நடத்தும் அப்படிப்பட்ட கூட்டங்களை ஏன் நம்மால் நடத்த முடியவில்லை? வெறுமனே ஆடுகளாக மாற வேண்டும். நீங்கள் ஒரு செம்மறி ஆடாக மாறுவீர்கள் என்றால், அந்த புறாவானது மீண்டுமாக இதயத்திற்குள் வந்து அமர்ந்து வாசம் செய்து கொண்டிருக்கும். அவர் இன்னுமாக அதே புறாவாக இருந்து கொண்டிருக்கிறார். ஆகவே நீங்கள் ஒரு செம்மறி ஆடாக இருக்க வேண்டும். நீங்கள் சீறினாலோ, வம்பு செய்தாலோ, முணு முணுத்தால், புறங்கூறுபவர்களக இருந்தாலோ அவர் அங்கே தங்குவார் என்று நீங்கள் எதிர்பார்க்க முடியாது. அவர் அதைச் செய்ய மாட்டார். நீங்கள் ஒரு ஆட்டைப் போல் மாற வேண்டும் உங்களுடைய இயற்கை சுபாவம் மாற்றப்பட்டிருக்க வேண்டும் அதன் பின்பு அவர் வந்து அங்கே தங்குவார் என்று நீ அது சரியே. நீங்கள் செம்மறி ஆட்டின் இயல்பை கொண்டிருப்பீர்களானால் அந்த மற்ற பாகமானது அதன் ஸ்தானத்தை எடுத்துக் கொள்ளும். 13: அவருடைய முகத்தில் இருந்து தாடியை பிடுங்கிய போது அவருக்கு ஒரு சுதந்திரம் இருந்தது. சிலுவையில் அறையப்பட்ட அந்த வேளையில்......நான் இப்பொழுது என் பிதாவை வேண்டிக் கொண்டால் அவர் லட்சக்கணக்கான லேகியோனுக்கு அதிகமான தூதர்களை அவர் அனுப்பமுடியும்" என்று கூறினார். அவரால் அதைச் செய்திருக்க முடியும், ஆனால் அவர் ஒரு ஆட்டுக்குட்டியாக இருப்பதற்காக அவர் தனது உரிமையை விட்டுக் கொடுத்தார். உங்களுக்காக மரிப்பதற்காக அவர் ஒரு ஆட்டுக்குட்டியாக இருந்தார். "சகோதரர் பிரன்காம் அவர்களுடைய பண்டைய பாணியிலான கூட்டங்களுக்கு திரும்புவதற்கான வழி என்ன?" என்று நீங்கள் கூறுகிறீர்கள். வெறுமனே மீண்டுமாக ஆட்டுக்குட்டியாக மாறுங்கள். அவ்வளவு தான். செம்மறி ஆடாக இருந்து கொண்டிருங்கள். அந்த புறாவானவர் வெகுதூரம் சென்று விடவில்லை. அவர் திரும்பவும் வருவதற்கான ஒரு சந்தர்பத்திற்காக காத்துக் கொண்டிருக்கிறார். அது தான் அசுசா வீதிக்கு திரும்பும் சாலையாக இருக்கிறது. அங்கே பின்னால் அந்த இடம் இருந்துகொண்டிருக்கிறது. மீண்டுமாக அசுசா வீதி கூட்டங்களுக்கு திரும்புங்கள், மீண்டுமாக அந்த ஆட்டுக்குட்டி இயல்பான நிலைக்கு திரும்பும்... 14. நீங்கள் ஒரு ஓநாய் அல்லது தோட்டி பறவையாக இருந்து கொண்டு அந்த அமைதியான புறாவானது உங்களிடத்தில் தங்கி வாசம் பண்ணும் என்று நீங்கள் எதிர்பார்க்கவே முடியாது. அவர் அதைச் செய்யமாட்டார். நீங்கள் ஆட்டுக்குட்டியாக மாற வேண்டும் உங்களுடைய சுபாவம் மாற்றப்பட வேண்டும். பிறகு நீங்கள் வித்தியாசமாக காரியங்களைப் பார்ப்பீர்கள். பண்டைய கால பாணியில் பரிசுத்த ஆவியின் வேதம், மற்றும் வாழ்வதற்கான நல்ல வழி இவற்றைக் குறித்து போதகர் போதிக்கும் போது அவருக்கு எதிராக நீங்கள் வம்பு செய்ய மாட்டீர்கள். அந்த ஓநாயின் ஆவி அல்லது தோட்டி பறவையின் ஆவியை அகற்றி விடுவீர்கள். மேலும் ஆட்டுக்குட்டியின் இயல்பான தன்மையை பெற்றுக் கொள்வீர்கள். ஆகவே நீங்கள் ஒரு முறை செய்த எல்லா காரியங்களையும், உங்களுடைய உலகப் பிரகாரமான உரிமைகளையும் இப்படிப்பட்ட எல்லாவற்ைைறயும் விட்டுக் கொடுக்க நீங்கள் தயாராக இருப்பீர்கள் ஆமென். கிறிஸ்துவ நண்பர்களே இங்கு நான் உண்மையாக நின்று கொண்டிருப்பபதைப் போலவே, இதுவும் உண்மையாக இருக்கிறது. உங்களை தாழ்த்துங்கள். எல்லாவற்றையும் அறிந்து கொள்ள முயற்சிக்காதீர்கள். பாருங்கள் எவ்வளவாக உங்களை மறக்க முடியுமோ, மறந்துவிட்டு உங்களுக்கு தெரிந்த நல்ல காரியங்களை செய்ய அறிந்து கொள்ளுங்கள். ஓரே ஒரு காரியத்தை மட்டுமே அறிந்து கொள்ளுங்கள். அது கிறிஸ்துவாக இருக்கிறது. 15. அந்த பிலிப்பிய சிறைக் காவலன் "இரட்சிக்கப்படுவதற்கு நான் என்ன செய்ய வேண்டும்?" என்று கேள்வி கேட்கப்பட்டதைப் போல, அவன் என்ன செய்ய வேண்டும் என்று பவுல் கூறினான். ஆனால் நாம் அதை மாற்றி விட்டோம். அவன் செய்யக்கூடிய பல காரியங்களை அவனிடம் கூறுவதற்குப் பதிலாக வேறு அநேக காரியங்களை செய்ய அவனிடம் கூறுகிறோம். மேலும் அவனை ஒரு போலி சீடனாக ஆக்கி விடுகிறோம். அவனை கிறிஸ்துவிடம் கொண்டு வாருங்கள் அந்த கிறிஸ்துவினால் அவனுடைய இயல்பை ஒரு ஆட்டுக்குட்டியாக மாற்ற முடியும், ஆகவே மற்ற எல்லாக் காரியங்களும் சரியாக இருக்கும். ஏனென்றால் அந்த புறாவாகிய தேவனுடைய ஆவி அவன் மேல் வந்து தங்கி அவனை வழி நடத்தும். 16. அந்த அசுசா வீதியின் ஜனங்கள் தங்களை தாங்களே ஆட்டுக் குட்டிகளாக தாழ்த்திய போதுதான் அந்த பரிசுத்த ஆவியானது உள்ளே வந்தது. நாம் நம்மிடம் உள்ள எல்லாவற்றையும் விட்டுக் கொடுக்க தயாராக இருப்போம் என்றால் இந்த நிமிடமே இந்த கட்டிடத்தில் இந்த அவர் அதைச் செய்வார். மேலும் தாழ்மையுள்ள ஆட்டுக்குட்டிகளாக நம்மை தாழ்த்திக் கொள்ளும் போது இந்தக் கூட்டத்தை அவருடைய சொந்த வல்லமையால் எடுத்துக் கொள்வார். மேலும் பரிசுத்த ஆவியால் ஆடுகள் வழிநடத்தப்பட்டு இங்கிருந்து வெளியே செல்வதைத் தவிர அங்கு வேறொன்றும் இருக்க முடியாது அது சரியே. அவர் இங்கே இருக்கிறார் என்று எனக்குத் தெரியும். அந்தப் புறாவானது இன்று இரவு ஒரு இடத்தை பெற்றுக் கொள்ள.... உட்கார்ந்து காத்துக் கொண்டிருக்கிறது. தேவனுக்கு முன்பாக நவீன கிறிஸ்தவர்களாக எவ்வளவு பயங்கரமான ஒரு நிலையில் நடந்து கொண்டிருக்கின்றோம். நாம் எவ்வளவாக நம் வழிகளை மாற்றிக் கொள்ள வேண்டும். 17. இங்கே தென்பாகத்தில் சில காலத்திற்கு முன்பு அவர்கள் அடிமைகளை வாங்குவது வழக்கமாக இருந்தது. இன்று நாம் பழைய வாகனங்களை வாங்குவதைப் போல இடைத்தரகர்கள். ஒரு குறிப்பிட்ட தோட்டத்திற்கு வந்து "விற்பனைக்கு எத்தனை அடிமைகளை வைத்திருக்கிறீர்கள்?" என்று ஒரு தரகன் கூறினான். அவன் சில அடிமைகளை வைத்திருந்தான். மேலும் அங்கு ஒரு வாலிபன் இருந்தான். இந்த அடிமைகள் வீட்டிலிருந்து வெகுதூரம் கொண்டு வரப்பட்டு இருந்தனர். அவர்களுடைய தாய் நாட்டிற்கு இனி ஒரு போதும் அவர்கள் திரும்பிப் போக முடியாது என்று அவர்களுக்கு தெரியும். 'போயர்கள் (அடிமைகளை விற்பனை செய்பவர்கள்) அவர்களை ஆப்பிரிக்காவிலிருந்து கொண்டு வந்து தென்பகுதியில் அவர்களை அடிமைகளாக விற்றுப் போட்டனர். அவர்களை சவுக்குகளால் அடிப்பார்கள், காரணம் அவர்களால் அவர்களுடைய வேலையை செய்ய முடியாது'. 18. அவர்கள் மிகவும் வருத்தமுடன் இருந்து கொண்டிருந்தனர், ஆனால் இந்த ஒரு வாலிபன் மட்டும் இப்படியாக தன்னுடைய நெஞ்சை வெளியில் நிமிர்த்தி முகத்தை மேல் நோக்கினவாக நடந்து செல்ல முடிகிறது என்பதை அவர்கள் கவனித்தனர். நீங்கள் அவனை சவுக்கால் அடிக்க வேண்டியதில்லை. அவன் எழுந்து அந்த வேலைகளை செய்து கொண்டிருந்தான், ஆகவே இந்த இடைத்தரகன் "நான் அந்த அடிமையை வாங்க விரும்புகிறேன்" என்றான் அதற்கு அந்த தோட்டத்து உரிமையாளர் "இவன் விற்பனைக்கு அல்ல" என்று கூறிவிட்டார். அவன் "ஏன், மற்ற அடிமைகளில் இருந்து இவனை மிகவும் வித்தியாசப்படுத்துகிறது எது? இவன் அவர்களுக்கு தலைவனாக இருக்கிறானா? என்று கேட்டான். அதற்கு அந்த உரிமையாளர் "இல்லை அவனும் மற்ற அடிமைகளைப் போலவேதான் இருக்கிறான்" என்று கூறினார். 18. ஒரு வேளை இவனுக்கு மற்ற அடிமைகளுக்கு தருவதை விட சிறப்பான உணவு ஏதேனும் அவனுக்கு கொடுக்கப்பபடுகிறதா" என்று கூறினான். "இல்லை மற்றவர்களுக்கு கொடுக்கப்படுகிற அதே உணவைத்தான் அவனும் சாப்பிடுகிறான்" என்று கூறினார். "எது அவனை மற்றவர்களிடத்திலிருந்து மிகவும் வேறுபடுத்துகிறது?' என்று கேட்டான். ''எனக்கும் கூட அது தெரியாமல்தான் இருந்தது, ஒரு நாள் அப்பால் உள்ள அவனுடைய சொந்த தாய்நாட்டில் இருந்து அவன் கொண்டு வரப்பட்டவனாகவும் அவனுடைய தகப்பனார் ஒரு பழங்குடி இனத்திற்கு இராஜாவாக இருக்கிறார் என்பதையும் தெரிந்து கொண்டேன். ஆகவே இன்னுமாக அவன் ஒரு அந்நியனாகவும், பரதேசியாகவும் இருந்தாலும், அவன் மற்றவர்களுக்கு முன்பாக உறுதியாக இருந்து கொண்டிருந்தான், ஏனென்றால் அவன் அந்நியனாக இருந்த போதிலும் இன்னுமாக அவன் ஒரு இராஜாவின் மகன் என்பதை அறிந்திருக்கிறான். 19. பரிசுத்த ஆவியினால் நிறையப்பட்ட எப்படிப்பட்ட ஒரு மக்களாக நாம் இருக்க வேண்டும், இருந்தாலும் நாம் அந்நியர்களாகவும், பரதேசிகளாகவும் இருந்து கொண்டிருக்கின்றோம். உலகத்தின் மற்றவர்களைப் போல அல்லாமல் எப்படியாக நம்மை நாமே பிரித்துக் கொண்டு எப்படிப்பட்ட ஒரு வாழ்க்கையை நடத்த வேண்டும். நம்முடைய முகங்களை நிமிர்த்திக் கொள்ளுங்கள். ஏனென்றால் ஒரு காரியம் மட்டுமே நமக்கு தெரியும்; நாம் இராஜாவினுடைய குமாரர்களும், குமாரத்திகளுமாய் இருந்து கொண்டு இருக்கிறோம். இப்பொழுது ஒரு இராஜாவின் குமாரத்தி ஒழுக்கமற்ற விதத்தில் செல்ல முடியாது. மேலும் அவள் அந்த விதமாக உடை அணிய மாட்டாள். அவள் கண்ணியத்துடன் தன்னையே பொது ஜனங்களுக்கு தன்னை பிரதி நிதித்துவப்படுத்துகிறாள். ஏனென்றால் அவள் ஒரு இராஜாவின் குமாரத்தியாக இருந்துகொண்டிருக்கிறாள். ஆமென். அப்படியே ஒரு மனிதனும் கூட அங்கே அந்த இராஜாவின் குமாரனாக இருந்து கொண்டிருக்கும் பொழுது அசுசா வீதியின் அனுபவத்திற்குள்ளாக அங்கே திரும்பவுமாக செல்லும் வழியாக இருக்கிறது. உலகத்தைப் போல உடை உடுத்திக் கொள்ளாமல் உலகத்தைப் போல நடிக்காமல், மேலும் உலகத்தைப் போல பேசாமல் நம்மை நாமே தேவனுடைய குமாரனும், குமாரத்தியாகவும் நடத்திக் கொள்ள வேண்டும். திரைப்பட நடிகர் நடிகைகளின் (Hollywood) எல்லாவிதமான அப்படிப்பட்ட ஹாலிவுட் நிகழ்ச்சிகளையும், புதன்கிழமை இரவு வீட்டில் அமர்ந்து பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள். நமக்கு அதனுடன் எந்த ஒரு காரியமும் இல்லை. நாம் மறுபடியும் பிறந்த பெந்தே கொஸ்தே அனுபவத்தில் இருந்து கொண்டிருக்கிறோம். ஹாலிவுட்டானது பொழுதுபோக்கிற்கான அதற்குரிய இடத்தை உடையதாக இருக்கிறது. நாம் நம்முடைய பொழுது போக்கை கொண்டிருக்கிறோம். அவர்களுடைய பொழுதுபோக்கு உலகமாக இருந்து கொண்டிருக்கிறது. ஆகவே நம்முடைய பொழுதுபோக்கு கிறிஸ்துவில் இருந்து கொண்டிருக்கிறது. ஆகவே நாம் அவர்களுடைய மாதிரியை பின்பற்ற முடியாது நாம் கிறிஸ்துவை பின்பற்றுகிறோம், அவரைப் போல நடந்து கொண்டு அவரை நேசிக்கிறோம். 20. இப்பொழுது, என்ன ஒரு அழகான காட்சியை நமக்கு கொடுக்கின்றது. நம்முடைய நடத்தையின் காரணமாக தேவனுடைய இருதயம் எப்படியாக உடைந்திருக்கும், அவர் நம்மை அவருடைய குமாரத்தியாகவும் ஏற்றுக் கொண்ட பிறகு நாம் நடந்து கொண்ட விதம், குமாரனாகவும், நாம் கொண்டிருக்கும் மனக்கசப்புகள், வம்புகள், மேலும் அற்ப காரியங்கள் அது அப்படி இருக்க கூடாது அது அப்படி இருக்க முடியாது ஆனால் நாமோ இன்னுமாக நம்மை தேவனுடைய குமாரர்கள், குமாரத்திகள் என்று அழைத்துக் கொள்கிறோம். நாம் துணிச்சல் கொண்ட மனிதர்களாக இருக்க வேண்டும். நாம் துணிச்சலான பெண்மணிகளாக இருக்க வேண்டும். நாம் தேவனுடைய பிள்ளைகளாக நம்மை நாமே நிலைநிறுத்திக் கொள்ள வேண்டும். நமது கர்த்தர் இருந்ததைப் போல நாமும் இந்த உலகிற்கு ஒரு முன்மாதிரியாக இருக்க வேண்டும். தாவீதைப் போல நாமும் ஒரு சிறந்த ஜீவியம் செய்ய வேண்டும். தேவன் அவனைப் பார்த்த போது அவன் எப்பபடியாக ஒரு தீரமான மனிதனாக இருந்தான், "நீ என்னுடைய இருதயத்திற்கு ஏற்ற ஒரு மனிதன்" என்று தேவன் கூறினார். 21. சில நாட்களுக்கு முன்பு ஆப்பிரிக்காவில் ஒரு வயதான பரிசுத்தவானுடன் பேசிக் கொண்டிருந்தேன். அவர் என்னிடம் "சகோதரர் பிரன்காம் அவர்களே, ஒரு நாள் இரவு கீழே உள்ள எனது சபையில் எங்களுக்குள்ளே ஒரு பிரிவினை இருந்து கொண்டிருந்தது. ஒருவர் 'இதைச் செய்ய வேண்டும்' என்று சொல்லிக் கொண்டிருந்தார், மற்றொருவர் 'வேறு ஒன்று தேவை' என்றார். இதைப் போன்ற சிறிய உபதேசங்களை எங்களுடைய சபைக்குள் உருவாக்கி விட்டனர். ஆகவே நான்..."பரிசுத்த பார்க்கவே ஆவியானவர் நம்மை மாட்டார்" என்று கூறினேன் என்று சொன்னார். அவர் ஒரு போதும் அந்த மாதிரியான சூழ்நிலைகளின் கீழ் இருக்கவே முடியாது. மேலும் அவர்களில் "ஒருவர் இந்தக் கோட்பாட்டை "அதை விசுவாசிக்கிறேன்" என்கிறார். அவர்களில் வேறு ஒருவர் இப்படித்தான் துவங்க வேண்டும்" என்று கூறுகிறார். ஆகவே நாங்கள் ஒரு பிரிவினையைக் கொண்டிருந்தோம் என்றார். மேலும் அவர் "அதைக் கூறுவதற்கு வெட்கப்படுகிறேன்" என்றார். "நான் ஒவ்வொருவருக்கும் ஒரு முடிவை எடுக்க முயன்று கொண்டிருந்தேன்" ஒரு மேய்ப்பன் அப்படி ஒரு போதும் செய்ய முடியாது. நீங்கள் வலதுபுறம் அல்லது இடதுபுறம் சாயாமல் தேவனுடைய நித்தியமான சத்திய வார்த்தையில் சரியாக நிற்க வேண்டும். மேலும் அவர் "நான் என்னுடைய காரை நிறுத்திவிட்டு மலையின் மீது சென்று கொண்டிருந்தேன்" மேலும் "நான் ஏறக்குறைய மலை உச்சிக்கு வந்தவுடன் எனக்குப் பின்னால் யாரோ நடந்து வந்து கொண்டிருப்பதைப் போல இருந்தது. ஆகவே நான் பின்னால் திரும்பிப் பார்த்த போது அந்த மலையில் யாரோ ஒருவர் நடந்து கொண்டிருக்கிறதைப் போல காலடி சத்தத்தை கேட்டேன்" என்று கூறினார். மேலும் "நான் மலையேறும் போது இந்த ஒருவர் அந்த பக்கம் இருந்திருக்கக்கூடும், ஆகையால் அவருக்காக கொஞ்சம் காத்திருப்பேன் என்று நினைத்தேன்" என்று கூறினார். ஆகவே நான் மலையின் மீது நின்று கவனித்த போது ஒரு சிறிய மனிதர் மேலே வந்து கொண்டிருப்பதைக் கவனித்தேன், ஆனால் ஒரு பெரிய சுமையை அவருடைய முதுகில் வைத்திருந்தார். எப்படி அந்த சிறிய மனிதரால் அப்படிப்பட்ட ஒரு சுமையை சுமந்து கொண்டிருக்க முடிகிறது என்று எனக்கு புரிந்து கொள்ள கடினமாக இருந்தது என்று கூறினார். மேலும் "நான் அவரை பார்த்தேன், உடனே ஒரு பொழுதில் நான் ஒரு தரிசனத்தை காண்கிறேன் என்று எனக்கு தெரிந்து விட்டது. அவரது கைகளில் தழும்புகள் இருப்பதைப் பார்த்தேன" என்று கூறினார். மேலும் "நான் அவரிடம் ஒடிச்சென்று, "கர்த்தாவே, இன்னுமாகவா இந்த உலகத்தின் பாவங்களை சுமந்து கொண்டிருக்கிறீர்?" என்று கூறினேன். "இல்லை வெறுமனே உங்களுடைய பாவங்களை மட்டுமே சுமந்து கொண்டிருக்கிறேன்" என்று கூறினார். அந்த தரிசனம் என்னை விட்டு அகன்ற போது நான் சபைக்குச் சென்று அந்த தரிசனத்தைக் கூறினேன், மேலும் 'இந்த சபையின் பாவங்கள் கர்த்தராகிய இயேசுவை துக்கப்படுத்தினதைப் போல துக்கப்படுத்திக் கொண்டிருக்கிறது. நாம் எல்லோரும் மனம் திரும்ப வேண்டும்" என்று கூறினேன். மேலும் "அது சபையில் ஒரு பெரிய துயர் உணர்வை ஏற்படுத்தி சபையில் ஒரு உண்மையான எழுப்புதல் ஏற்படுவதற்கு காரணமாக இருந்தது" 22. இந்த உலகம் அப்படிப்பட்ட ஒரு சபையைத்தான் கவனித்துக் கொண்டிருக்கிறது. நாம் ஒரு உதாரணமாக இருக்க முடியும். இந்த உலகத்திற்கு தேவனுடைய சபையானது ஒரு மாதிரியாக இருந்து கொண்டிருக்கிறது என்பதை நான் நம்புகிறேன். நம்மால் வித்தியாசமாக வாழ முடியும், வித்தியாசமாக நடந்து கொள்ள முடியும், வித்தியாசமாக இருக்க முடியும். "நீங்கள் இந்த உலகத்தார் அல்ல சிறுபிள்ளைகளே" என்று வேதம் சொல்கிறது. 23. ஆகவே என்னுடைய நேரம் சென்று கொண்டிருக்கிறது. ஆகையால் இதை நான் கூற விரும்புகிறேன். சில காலத்திற்கு முன்பு மேலே உள்ள அழகான அந்த பசுமை நிற மலைகளில் (New Hampshire புதிய 'ஹாம்ப்சயர்'-ஐ உங்கள் அனைவருக்கும் தெரியும், நான் அங்கே சென்று வேட்டையாடுவது எனக்கு பிடிக்கும், விலங்குகளை வேட்டையாடுவதற்காக அல்ல ஆனால் தேவனுடன் தனிமையில் இருப்பதற்காக. ஒவ்வொரு நபரும் தேவனுடன் தனித்து இருப்பதை விரும்புகிறார்கள். நீங்கள் தேவனுடன் தனித்து இருக்கும் போது அந்த இனிமையான அமைதியை நீங்கள் வழக்கமாக கொண்டிருக்க முடியும். இப்பொழுது எல்லாவற்றையும் உங்களிடம் இருந்து அது எடுத்துப் போடுகிறதாக இருக்கிறது. ஏன்? காரணம் அந்த புறாவானது அப்பால் சென்று விடும்படியாக நீங்கள் எதையாவது செய்து விடுகிறீர்கள். நீங்கள் வெறுமனே ஒரு ஆட்டுக்குட்டியாக இருக்கும்படி திரும்பி வர வேண்டும், அவரும் உங்களிடம் வருவார். 24. கவனியுங்கள், அங்கே மேலே ஒரு வேட்டைக்காரனுடன் எனக்கு பழக்கம் இருந்தது. மேலும் நான் அநேக நேரங்களில் நான் சில, சில முரட்டுத்தனமான மாடு மேய்ப்பவர்கள் மற்றும் காட்டில் வசிப்பவர்களை கிறிஸ்துவுக்குள் வழி நடத்தியிருக்கிறேன். மேலும் நான் எப்பொழுதும் பார்த்ததிலேயே மிகவும் கொடூரமான வேட்டைக்காரனாக இந்த நபர் இருந்தான். சிறிய மான்குட்டிகளை சுட்டுவிடுவான், அவைகளை கண்டு பிடித்து ஒரு வருடத்தில் டஜன் கணக்கில் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றுவிடுவான், மேலும் மேலும் அப்படியே செய்து கொண்டிருப்பான். நான் அவனிடம் "பெர்ட், அது தவறு. நீ அப்படி செய்யக்கூடாது. நீ ஒரு கடினமான இதயம் கொண்டவனாக இருக்கிறாய்'' என்று கூறினேன். அதற்கு அவன் "போதகரே, நீங்கள் வெறுமனே ஒரு கோழிக்குஞ்சு இதயம் கொண்டவராக இருக்கிறீர்கள்'' என்றான். மேலும் "உங்களுடைய போதகர்களும் கூட கோழிக்குஞ்சு இதயம் உடையவர்களாகத்தான் இருக்கிறார்கள். என்றான்." "ஆனால் பெர்ட், அங்கே ஏராளமாக பெரிய ஆண் இனத்தைச் சேர்ந்த வயதான மிருகங்கள் இருந்து கொண்டிருக்கின்றன, இங்கே உள்ள சட்டப்படி நீ அவைகளை சுட முடியும் ஆனால் பாவம் அந்த சிறிய மான் குட்டிகளை, அப்படிப்பட்ட காரியங்களை செய்யக்கூடாது" என்று கூறினேன். ''ஆவ் ... மென்மையான போதகரே போங்கள்...." என்று கூறினான். 25. ஆகவே அவன் அவனாகவே ஒலி அல்லது சத்தம் எழுப்பும் ஒரு சிறிய கருவியை செய்து வைத்துக் கொண்டு, ஒரு சிறிய மான்குட்டி கத்துவதைப் போல ஆள்மாறாட்டம் செய்து சரியாக ஒலி எழுப்புவதை நான் கேட்டிருக்கிறேன். ஆகவே ஒரு நாள் அந்த மலையின் மேல் அவனுடன் இருந்தேன். அவன் ஒரு அடர்த்தியான புதர் ஒன்றுக்குள் அமர்ந்திருந்தான். மேலும் நான் அவனுக்கு அடுத்தபடியாக இருந்து கொண்டு கர்த்தராகிய இயேசுவைக் குறித்துப் பேசிக் கொண்டிருந்தேன். மேலும் நம்முடைய பெந்தெகோஸ்தே ஜனங்கள் செய்வதைப் போல, அவன், எப்படியும் எனக்குக் காண்பிக்க வேண்டும் என்றே அதைச் செய்ய விரும்பினான். நீங்கள் பார்த்தீர்களா? "அதனுடன் செய்வதற்கு எனக்கு எந்த ஒரு காரியமும் இல்லை. நான் என்ன செய்வேன் என்பதை நான் காண்பிப்பேன்" என்று அந்த வழியிலேயே சென்று கொண்டு இருந்தால் நீங்கள் அதன் பிறகு தேவனுடன் தொல்லையில் அகப்பட்டுக் கொள்வீர்கள் அவ்வளவுதான். அவன் கீழே அமர்ந்து கொண்டு, ஒரு சிறிய மான்குட்டி துயரமுடன் குரல் எழுப்புவதைப் போல இப்படியாக ஒலி எழுப்பிக் கொண்டிருந்தான். நான் சற்று அந்த புதரின் பக்கமாக சென்று அமர்ந்து கொண்டேன். எனக்கு ஆச்சரியப்படுத்தும் விதமாக அப்படியே அழகான பெண்மான் ஒன்று அடியெடுத்து வெளியில் குறுக்காக வந்தது. ஓ.... பார்ப்பதற்கு அது ஒரு அழகான விலங்கு: வெளியே வந்து அதனுடைய அதனுடைய காதுகளை, மூக்கிற்கு நேராக வைத்துக் கொண்டு சென்று கொண்டிருந்தது. அது தன் குட்டியின் குரலைக் கேட்டது. ஒரு சில அடிகள் தொலைவில் நடந்து சென்றது. அந்த மனிதன் துப்பாக்கியை உயர்த்தி விசையை கீழே இழுப்பதைப் பார்த்தேன். "ஓ. தேவனே அவன் அதைச் செய்யாதபடி செய்வீராக" என்று கூறினேன். 26. அவன் துப்பாக்கியை மேலே உயர்த்தி, கையை உயரே வைத்து குறிபார்த்தான். ஆனால் அந்த பெண்மான் இன்னுமாக அந்த குட்டியின் சத்தத்திலேயே அக்கறை கொண்டிருந்தது. அப்படியே அந்த பெண்மான் குறுக்காக கடந்து வந்து அந்த வேட்டைக்காரனை கவனித்து விட்டது. அப்படியே அதன் இதயத்தை நோக்கி குறி வைக்கப்பட்டிருந்த அந்த துப்பாக்கியை கவனித்தது அது அந்த பெண்மானை நிறுத்த முடிந்ததா? இல்லை, அது தன் குட்டியின் அழுகுரலை கேட்டது. துப்பாக்கியானது அதனுடைய இதயத்திற்கு நேராக இருந்த போதிலும் அதன் இதயத்திற்கு குறி வைக்கப்பட்டிருந்த அந்த துப்பாக்கியை விட தன்னுடைய குட்டியின் குரலே அதற்கு முக்கியமானதாக இருந்தது. அது முன்னோக்கி அடியெடுத்து வைத்து குட்டியின் சத்தத்தை கவனித்துக் கொண்டிருந்தது. ஆகவே நான் அந்த வேட்டைக்காரனைக் கவனித்தேன். அவனுடைய கைகள் நடுங்கிக் கொண்டிருப்பதைப் பார்த்தேன். அவன் அந்த துப்பாக்கியை கீழே போட்டுவிட்டான்: அவன் திரும்பி ஓடி வந்து அவனுடைய கைகளை வீசி என்னை சுற்றிப்பிடித்துக் கொண்டு "சகோதரர் பிரன்காம் அவர்களே இனிமேலும் நான் இதைச் செய்ய மாட்டேன்" என்று கூறினான். அவன் அந்த துணிச்சலான தாயின் அன்பின் காட்சியைப் பார்த்தான். சகோதரனே, இந்த உலகமானது தேவனுக்காக சரியாக நிற்கும் துணிவுமிக்க சிலுவைப் போர்வீரர்களையும், உண்மையான வீரர்களையும் பார்த்துக் கொண்டிருக்கிறது. பெந்தேகொஸ்தே ஜனங்களாகிய நீங்கள் அப்படிப்பட்ட உதாரணத்தை கொடுக்க வேண்டும். 27. நடுக்கத்துடனும், உதறலுடனும் அப்படியே அங்கே அவன் முழங்கால் படியிட்டு"அந்த பெண்மான் நேராக என் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தததை பார்த்தீர்களா? சகோதரர் பிரன்காம் அவர்களே" என்று கூறினான். ''ஆம் பெர்ட் நான் பார்த்தேன்" என்று கூறினேன். மேலும்'அது மரணத்தைக் கண்டு பயப்படவே இல்லை" மேலும் அது கொண்டிருந்த அன்பானது தன்னுடைய குட்டியைப் பாதுகாப்பதற்காக மரணத்தின் முகத்திற்கு நேராக அதை சந்திப்பதற்கு நடந்து சென்றது. நீ குரல் எழுப்பியதைப் போல" என்றேன். "பெர்ட் ஒருநாள் அங்கே ஒரு மனிதர் பரலோகத்தில் இருந்து இறங்கி வந்தார். அவர் மரித்துக் கொண்டிருக்கிற ஜனங்களின் கூக்குரலை கேட்டார், அவர் பயப்படாமல் மரணத்தை சந்திப்பதற்காக நடந்து சென்றார்; பெர்ட், உனக்காகவும் கூட, அவர் அதைச் செய்தார்" என்று கூறினேன். வானத்திற்கு நேராக தன்னுடைய கைகளை அங்கேயே தன்னுடைய முழங்காலில் நின்று அந்த விலை மதிப்பற்ற உயர்த்தியவாறு கர்த்தராகிய இயேசுவை தன்னுடைய இருதயத்தில் கண்டுபிடிக்கும் மட்டாக அவன் அழுதான். ஆகவே ஒரு கொடூரமான ஓநாயில் இருந்து அவன் ஒரு செம்மறி ஆடாக மாறிவிட்டான்; மேலும் பரிசுத்த ஆவியானது அவனுக்குள் வந்தது. 28. ஒரு சில வருடங்களுக்கு முன்பு சுமார் ஐம்பது அல்லது அறுபது வருடங்களுக்கு முன்பாக மத்திய கிழக்கு தேசத்தில் குறிப்பிட்டுக் கூறும்படியான சுவிசேஷகர் ஒருவர் அங்கே இருந்தார். அவருடைய பெயர் தானியேல் க்யூரி (Daniel Curry) என்பதாக இருந்தது. உங்களில் அநேகர் அவரைக் குறித்து கேள்விப்பட்டிருப்பீர்கள். அவருடைய சுவிசேஷ ஊழியத்தின் நிமித்தம் மத்திய அமெரிக்காவில் அவர் நன்றாக அறியப்பட்டிருந்தார்; அவர் சுவிசேஷத்தைக் குறித்து நன்கு அறிந்த ஒரு அருமையான வேதபண்டிதராகவும், சுவிசேச ஊழியக்காரராகவும் இருந்தார். ஆகவே அவர் ஒரு நாள் அவர் மரித்துப் போய் விட்டதாகவும், பரலோகத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டதாகவும் ஒரு சொப்பனம் கண்டார், மேலும் அவர் பரலோகத்தின் நுழைவு வாசலுக்கு வந்த போது, அவர்கள்,"நீங்கள் யார்?" என்று அந்த வாயில் காப்பவர் கேட்டார். அதற்கு அவர் "நான் தானியேல் க்யூரி ஒரு சுவிசேஷகன்" என்று கூறினார். அதற்கு அந்த வாயில் காப்போன், கொஞ்சம் பொறுங்கள் ஐயா, இங்கே உள்ள பதிவேட்டில் உங்கள் பெயர் பதிவு செய்யப்பட்டிருக்கிறதா நான் பார்க்கிறேன்" என்று கூறினான். ஆகவே அவன் சென்று அந்த புத்தகம் முழுவதையும் பார்த்தான். அவன் திரும்பி வந்து "ஐயா உம்முடைய பெயர் இங்கு பதிவு செய்யப்படவில்லை" என்று கூறினான். "ஓ, நீங்கள் தவறு செய்திருக்க வேண்டும், ஐயா, "என் பெயர் தானியேல் க்யூரி" என்று கூறினார். நுழைவுவாயிலில் நின்று கொண்டிருந்த அந்த தூதன், "ஐயா, உங்களை எனக்கு தெளிவாக புரிந்து கொள்ள முடிகிறது" என்று கூறினான். அதற்கு அவர், "முழுவதுமாக பார்த்தீர்களா?" என்றார். "நான் பார்த்து விட்டேன் ஐயா, ஆகவே உங்களுடைய பெயர் இங்கு பதிவு செய்யப்படவில்லை" என்று வாயில் காப்போன் கூறினான். "நல்லது, நான் என்ன செய்ய வேண்டும்" என்றார். அதற்கு அந்த தூதன், "உங்கள் வழக்கை வெள்ளை சிங்காசன நியாயத் தீர்ப்புக்கு மேல்முறையீடு செய்ய விரும்புகிறீர்களா? என்றான். "நல்லது, ஐயா எனக்கு வேறு ஒரு சந்தர்ப்பம் இல்லை. நான் வெள்ளைச் சிங்காசன நியாயத் தீர்ப்புக்கு எனது வழக்கை மேல்முறையீடு செய்துதான் ஆக வேண்டும்" என்று அவர் கூறினார். 29. ஆகவே தானியேல் க்யூரி விண்வெளியில் மேலே...மேலே சென்று கொண்டே இருந்தார். "சிறிது நேரம் கழித்து அவர் ஒரு வெளிச்சத்திற்கு வரத்துவங்கினார்" என்று கூறினார். மேலும் அவர் 'அது சூரியனை விட லட்சம் மடங்கு பிரகாசிக்கும் வெளிச்சமாக இருந்தது. அங்கே எந்த ஒரு குறிப்பிட்ட இடத்திலிருந்து அது வருகிறது என்று தெரியவில்லை. ஆனால் அவர் தன்னைச் சுற்றிலும் பிரகாசித்துக் கொண்டிருந்த கதிர் இயக்க ஒளியின் நடுவில் நின்று கொண்டிருந்தார்" என்று கூறினார். மேலும் ஒரு குரலானது பேசி "நீ தானியேல் க்யூரி தானே?" என்று சொல்லி அவரை நிறுத்தியது. அதற்கு அவர் "ஆம், கர்த்தாவே நான் தான்" என்று கூறினார். "தானியேல் க்யூரி. நீ பூமியில் இருந்த போது எப்பொழுதாவது பொய் சொல்லியிருக்கிறாயா? என்று அவர் கேட்டார். அதற்கு அவர் "அந்த நேரம் வரையிலும் நான் ஒரு போதும் பொய் கூறினது இல்லை என்று நினைத்தேன், ஆனால் அந்த பிரகாசமான வெளிச்சத்தின் முன்னிலையில் நான் கூறின பல காரியங்கள் தவறு என்று நான் உணர்ந்தேன்." அது எப்படிப்பட்ட ஒரு நாளாக இருக்கும்? என்று கூறினார். மேலும் அவர், "தானியேல் க்யூரி, நீ பூமியில் இருந்த போது எப்பொழுதாவது என் கட்டளையை முறித்து விட்டு திருடி உள்ளாயா? என்று கேட்டார். அவர் "நான் எப்பொழுதுமே நல்லவனாகவே இருந்து வந்திருக்கிறேன். ஆனால் "அந்த வெளிச்சத்தின் முன்னிலையில் நான் சில மாயையான காரியங்களுடன் தொடர்பு கூறினார். 'ஆம் தேவனே, நான் திருடினேன், நான் பொய் சொன்னேன்" என்றும் கூறினார். அதன் பின்பு அந்த சத்தமானது, "தானியேல் க்யூரி, நீ பூமியில் இருந்த போது பரிபூரணமாக இருந்தாயா?" என்று கூறியது. "ஓ, இல்லை தேவனே, நான் பரிபூரணமாக இல்லை" என்று கூறினார். "என்னை விட்டு அகன்று நித்திய ஆக்கினைக்குள்ளாக செல்லும்படி ஒரு கை தட்டுதலுக்காக அவர் காத்துக் கொண்டிருக்கிறார்" என்று அந்த சத்தம் கூறினது. "ஒவ்வொரு எலும்பும் பார்ப்பதற்கு முழங்காலை விட்டு அகன்று வெளியே போவதை போல இருந்தது. நான் அப்படியே நடுங்கியபடி நின்று கொண்டிருந்தேன். "திடீரென்று என் வாழ்நாளில் நான் கேட்டதிலேயே மிகவும் ஒரு இனிமையான சத்தத்தைக் கேட்டேன்" என்றார் "எந்த ஒரு அது ஒரு தாயின் சத்தத்தை விடவும் நான் கேட்ட சத்தங்களில் இனிமையான சத்தமாக இருந்தது. மேலும் "நான் திரும்பி என் பக்கத்தில் நின்று கொண்டிருந்தவரை கவனித்த போது நான் எப்பொழுதும் பார்த்ததிலேயே அழகான முகத்தைப் பார்த்தேன். ஒரு போதும் அப்படி ஒரு தாயின் முகத்தை அல்லது எந்த ஒன்றும் அதன் இடத்தை எடுத்துக் கொள்வதை நான் பார்த்தது இல்லை" மேலும், "அங்கு நின்று கொண்டிருந்த ஒருவர் பிதாவே டேனியல் கியூரியின் எல்லாப் பாவங்களையும் எடுத்து என் கணக்கில் வைத்து விடுங்கள், பூமியில் டேனியல் க்யூரி எனக்காக நின்றான். ஆகவே இங்கே பரலோகத்தில் நான் டேனியல் க்யூரிக்காக நிற்பேன்."என்று கூறினார். 30. ஓ எவ்வளவாக அவர் எனக்கு தேவையுள்ளவராக இருக்கிறார். எப்படியாக நான் ஏங்குகிறேன் ஓ...சகோதரனே பாவத்தின் மீது அலைந்து கொண்டே இருப்பது தகுதியாக இருக்குமா? வெது வெதுப்பான ஒரு நிலையில் வாழ்வது தகுதியாக இருக்குமா? ஒரு சபையை சேர்ந்து கொள்வது தகுதியானதாக இருக்குமா? இயேசுவுக்காக நாம் இப்பொழுது எழுந்து நிற்போமாக. அந்த மகத்தான வேளையானது வருகின்ற போது, அவர் மகிமையில் நமக்காக நிற்பார். என்னுடைய நேரம் கடந்து சென்று கொண்டிருக்கிறது. ஒரு நிமிடம் நாம் நம்முடைய தலைகளை தாழ்த்துவோமாக. அந்த எல்லா பார்வையாளர்களும். இசைப்பவர் ஒரு நிமிடம் இசைக்கருவியிடம் செல்லும் போது ஒவ்வொருவருடைய தலைகளும் வணங்கிய நிலையில் இருக்கட்டும். 31. எங்கள் பரலோகப் பிதாவே, நாங்கள் உமது மேய்ச்சல் நிலத்தில் செம்மறி ஆடுகளாக இருக்க விரும்புகிறோம். அந்த நாளில் நாங்கள் சுய நீதியின் மேல் நிற்க விரும்பவில்லை. நாங்கள் இப்பொழுது உமக்காக ஒரு நிலைப்பாட்டை எடுக்க விரும்புகிறோம். நாங்கள் கர்த்தராகிய இயேசுவாகிய உம்மை நேசிக்கிறோம். என் சொந்த வாழ்க்கைப் பாதையை நான் திரும்பி பார்க்கும் போது, உமது அற்புதமான கிருபையால் நீர் என்னை வழிநடத்திக் கொண்டு வந்ததை நினைத்து பார்க்கிறேன். அந்த முட்புதர்கள், குன்றுகள், பள்ளத்தாக்குகள் எல்லாவற்றையும் பார்க்கிறேன், மேலும் வீட்டை விட்டு வெளியேறினேன், என்னுடைய சிறிய குழந்தைகள் "அப்பா எங்களை விட்டு விட்டு செல்லாதீர்கள்" என்று என்னுடைய சட்டையைப் பிடித்துக் கொண்டு ஜெபம் செய்ததையும், கதறியதையும் நான் நினைத்துப் பார்க்கிறேன். மேலும் இந்த சிறியவர்களுக்காக, மற்றும் தலைமயிர் நரைத்த என்னுடைய சிறிய ஏழை மனைவி நடுக்கத்துடன் என் கையைப் பிடித்துக் கொண்டு அங்கு நின்று கொண்டு இருந்ததையும், கண்ணீர் அவளுடைய கன்னங்களில் இருந்து கீழே உருண்டோடியதையும்... நினைத்துப் பார்க்கும் போது என் இதயம் துடிக்கிறது. ஆனால் பிதாவே இவைகள் அனைத்தும் என் பாவங்களுக்கு ஒருபோதும் பரிகாரம் செய்யாது என்பதை நான் உணர்ந்து கொள்கிறேன். இயேசு அந்த நாளில் எனக்காக நிற்கவில்லையென்றால் என்னுடைய முயற்சிகள் அனைத்தும் வீணாகப் போய்விடும். மரித்துப் போய்க் கொண்டிருந்த என் மனைவியிடம் அந்த காலை வேளையில் சந்திப்பதாக நான் கொடுத்த வாக்குறுதிகள், என்னுடைய பிரசங்கங்கள், முயற்சிகள் அனைத்தும் இயேசு எனக்காக நிற்காவிட்டால் வீணாகிப் போய்விடும். 32. ஓ. தேவனே, அது ஒவ்வொருவருடைய இதயங்களில் இன்றிரவு பதியட்டும். நாங்கள் பெந்தெகொஸ்தே ஜனங்களாக இருக்கிறோம், பிதாவே எங்கள் பாவங்களுக்காக வருந்துகிறோம். எங்களுடைய பின் மாற்றத்திற்காகவும் எங்களுடைய குறைபாடுகளுக்காகவும் வெட்கப்படுகிறோம். தேவனே இன்றிரவு உம்முடைய வார்த்தையை எடுத்துக்கொண்டு எங்கள் எல்லாரையும் நாங்கள் வெறுமையாக்கட்டும் உலகத்தின் பாவசந்தோஷமாக இருக்கிற காரியங்களையும், இயேசுவுக்குப் பிடிக்காத ஒவ்வொரு காரியங்களையும் நாங்கள் இன்றிரவு பலி பீடத்தின் மீது பலியாக கிடத்துகிறோம். தேவனே இன்றிரவு அவைகளை எடுத்துக் கொள்வீராக, என்னை வெறுமையாக்குவீராக, உம்முடைய தாழ்மையுள்ள ஊழியக்காரன் உமக்காக நிற்கும்படியாக இப்பொழுது தறித்துப் போடுவீராக. தேவனே, "அது நன்றாக செய்யப்பட்டது" என்று அந்த நாளில் நீ கூறுவீர். எனக்காக மட்டுமல்ல, ஆனால் தேவனே, இங்குள்ள ஒவ்வொரு மனிதனுக்காகவும், பெண்ணுக்காகவும் அவர்கள் பாவம் செய்திருக்கலாம், அல்லது வழிவிலகிச் சென்று அவர்கள் ஒரு போதும் உம்மை ஏற்றுக் கொள்ளாமல் இருந்திருக்கலாம். ஆனால் அவர்கள் இன்றிரவு செம்மறி ஆடுகளாக மாற்றப்படட்டும். மேலும் அந்தப் புறாவானது இப்பொழுதே இந்த கட்டிடத்தின் மீதும், இந்த இடத்தின் மீதும் அபிஷேகம் பண்ணப்படட்டும். எங்களுடைய இருதயத்தின் ஆழத்தில் இருந்து அவருடைய பிரசன்னத்தை உணர முடிகிறது. தீர்க்கதரிசி குயவன் வீட்டிற்கு சென்றதைப் போல அவர் எங்களை நொறுக்கி போடட்டும். ஓ. தேவனே எங்களை வித்தியாசமான ஜனங்களாக உருவாக்குவீராக, எங்களை முழு அன்பினால் நேசிக்கும் ஜனங்களாக உருவாக்குவீராக. வருவதற்கு நாங்கள் இந்த இரவில் அந்த புறா வருவதற்கு நாங்கள் எங்களுடைய இதயக்கதவுகளை இன்றிரவு திறந்து வைக்கட்டும். பின்பு ஆண்களும், பெண்களுமாகிய நாங்கள் இங்கிருந்து புறப்பட்டுச் சென்று ஒரு உண்மையான கிறிஸ்தவனைப் போல நடந்து கொள்ளவும் வாழவும், உடை உடுத்தவும், உண்மையான கிறிஸ்தவனைப் போல இருக்கட்டும். அதை அருள்வீராக. 33. ஆகவே நம்முடைய தலைகள் தாழ்த்தப்பட்டிருக்கும் போது பார்வையாளர்களை குறித்து ஆச்சரியப்படுகிறேன். ஒரு சிறிய குழந்தையாக இருந்து அழுது கொண்டிருக்க வேண்டும் என்று நான் அர்த்தப்படுத்தவில்லை. ஆனால் அந்த நாளில் யார் எனக்காக நின்று கொண்டிருக்கப் போகிறார்கள் என்பதை நான் உணரும் போது.... என்னுடைய மேய்ப்பரால் முடியாது; என்னுடைய சகோதரனாலும் முடியாது; என்னுடைய தாயார் அவர்களாலும் முடியாது; இயேசு ஒருவர் மட்டுமே எனக்காக நிற்க முடியும். இன்றிரவு நான் ஆச்சரியப்படுகிறேன், உங்களில் சிலர் தங்கள் சொந்த இருதயத்தில் போதுமான நம்பிக்கை இல்லாமல் ஆவியைத் துக்கப்படுத்தியிருந்தால் உங்களிடமிருந்து புறாவானது சென்று விடும். இனிமேல் நீங்கள் அதன் இனிமையான அமைதியை கொண்டிருக்க முடியாது. உங்கள் பாத்திரங்களை சுத்தம் செய்ய கழுவும் தொட்டிக்கு செல்ல முடியாது. மேலும் ஜன்னலுக்கு வெளியே கவனித்துப் பாருங்கள். உங்களால் காண முடிந்தால் அவர் வந்து கொண்டிருப்பதை காண முடியும். வேலைக்குப் போக நீங்கள் உங்கள் காரை சாலையில் ஓட்டிச் செல்ல மாட்டீர்கள், சகோதரனே, மேலும் உனக்கு ஒரு சந்தர்ப்பம் கிடைக்கும் போது ஜன்னலுக்கு வெளியே வானத்தைப் பார்த்து முன்பு போலவே இனிமையான, ஆழமான அந்த சமாதானத்தை உங்கள் இருதயத்தில் இருப்பதை உணருவீர்கள். ஏதோ காரியம் சம்பவித்தது. அந்த புறா பறந்து சென்று விட்டது 34. இன்றிரவு நீங்கள் இயேசுவுக்காக நின்று கொண்டிருப்பதைக் குறித்து நான் வியப்படைகிறேன். நீங்கள் தவறாக இல்லாமல் இருப்பீர்கள் என்றால், நான் "என்னை முற்றிலுமாக வெறுமையாக்கிக் தயாராக இருக்கிறேன், நான் என்னை விட்டுக் கொடுக்க தயாராக இருக்கிறேன். என்னுடைய உலகத்தின் பாவசந்தோஷங்கள் எல்லாவற்றையும், உலகப்பிரகாரமான நடவடிக்கைகளையும் இழந்துவிட தயாராக இருக்கிறேன் என்றும் இந்த இரவிலிருந்து நிந்திக்கப்பட்ட தேவனுடைய சிலருடன் சேர்ந்து கொண்டு ஒரு நிச்சயத்தை எடுத்துக் கொள்வேன். இன்றிரவில் இருந்து தேவனை நோக்கி நான் முன்னேறி செல்வேன்." என்று உங்களால் கூற முடியும். கிறிஸ்தவர்களாகிய நாம் அனைவரும் தலைகளை, தாழ்த்துவோமாக, இப்பொழுதே என்னை முற்றிலும் வெறுமையாக்கும்படியாகவும், கிறிஸ்துவுக்கு பிடிக்காத எல்லா காரியங்களையும் என்னிடமிருந்து எடுத்துப் போடும்படியாகவும், யார் தங்களுடைய காலில் நின்று கேட்கப் போகிறீர்கள்? என்று ஆச்சர்யப்படுகிறேன். தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக, எல்லாவிடங்களிலும் அது நன்றாக இருக்கிறது. கொஞ்சம் எழுந்து நில்லுங்கள். நான் இப்பொழுதே கிறிஸ்துவை ஏற்றுக் கொள்கிறேன். என் ஜீவியத்தைக் குறித்து நான் வெட்கப்படுகிறேன்" எல்லா இடங்களிலும் நின்று கொண்டிருக்கும் ஜனங்களாகிய உங்களை தேவன் ஆசீர்வதிப்பாராக எழுந்து நில்லுங்கள். ஆகவே அந்த நாளில், அவர் அவர் உங்களுக்காக நிற்பார். நீங்களும் அப்படியே அவருக்காக நிற்பீர்கள் என்றால்....அந்த எளிய தீர்க்கதரிசன வரத்தை தேவன் எனக்கு கொடுத்தார், பரிசுத்த ஆவியானவர் என் இருதயத்தில் வந்து என்னிடம் கூறியதை இப்பொழுது இங்கே உள்ளவர்களை விட அநேகம் பேர் அங்கே நின்று கொண்டிருந்திருக்க வேண்டும், 35. இன்றிரவு கிறிஸ்துவுக்காக ஒரு நிலைப்பாட்டை செய்யுங்கள். உங்கள் முழு இருதயத்துடன் அதை அர்த்தப்படுத்துங்கள். அது சரியே. எழுந்திருங்கள். உங்களில் எவராவது ஒரு போதும் கிறிஸ்துவை ஏற்றுக் கொள்ளாமல், அல்லது உங்களில் யாராவது கிறிஸ்துவை விட்டு அப்பால் அலைந்து திரிகிறவராக இருந்தால், நாங்கள் ஜெபத்தை ஏறெடுக்கும் போது சரியாக இப்பொழுதே எழுந்து நில்லுங்கள் நீங்களும் எங்களுடன் சேர்ந்து தேவனிடத்தில் அதை சமர்பித்து இப்படியாக சொல்லுங்கள், "தேவனே நான் உலகப்பிரகாரமான ஒவ்வொன்றையும், இழந்துவிடவும் நான் அணிந்துள்ள எல்லா பாவசந்தோஷங்களையும் இப்பொழுதே இழந்து விடுகிறேன். அந்த சமாதானத்தின் புறா இறங்கி என்னுடைய இருதயத்திற்குள் வந்து என்னை அன்பு, சமாதானம் நிறைந்த ஒரு உண்மையான கிறிஸ்தவனாக ஆக்கும்படி செய்வீராக. அந்த மகத்தான குழுவுடன் நானும் எண்ணப்பட விரும்புகிறேன்''. 36. உலக அனுபவத்தை நீங்கள் பெற்றிருந்தால் இன்றிரவு நீங்கள் கிறிஸ்துவுக்காக நிற்பீர்களா? இதைச் செய்வதன் மூலம் அவர் உங்களுக்காக நிற்பதற்காக நீங்கள் அவருக்காக நிற்கப் போகிறீர்கள் என்பதைக் காட்டுகிறீர்கள். உங்கள் மனதில் ஏதாவது ஒரு சந்தேகம் கொண்டிருப்பீர்கள் என்றால் நீங்கள் வாழ்ந்த விதத்திலும், நீங்கள் நடந்து கொண்ட விதமாகவும் கிறிஸ்து உங்களுக்காக நிற்க மாட்டார். நீங்கள் எழுந்து நின்று, இந்த ஜெபத்தின் ஒரு பயனாளியாக இருப்பதற்கு உங்களை நான் கிறிஸ்துவின் நாமத்தில் கேட்டுக் கொள்கிறேன் அதற்காக நாங்கள் இன்றிரவு ஜெபிக்க போகிறோம் ஒவ்வொருவரும் எழுந்து நில்லுங்கள். நசரீன், யாத்ரீகர் பரிசுத்தர், பெந்தெகொஸ்தேயினர் மெதடிஸ்ட், பாப்டிஸ்ட், கத்தோலிக்கர், பழமை வாத யூதர்கள் நீங்கள் யாராக இருந்தாலும் எழுந்து நின்று இப்படியாக கூறுங்கள், இப்பொழுதே நான் சேர்த்துக் கொள்ளப்பட விரும்புகிறேன், தேவனே இந்த உலக காரியங்கள் ஒவ்வொன்றையும் விட்டுவிட தயாராக இருக்கிறேன். நீர் மட்டும் எனக்காக நிற்பீராக". தேவன் உங்களை ஆசீர்வதிப்பார். அங்கே அநேகர் நின்று கொண்டிருக்கின்றனர், அநேகர் நின்று கொண்டிருக்கின்றனர். 37. நான் ஒரு கணம் ஆச்சரியப்படுகிறேன். தலை வணங்கிய நிலையில் அப்படியே இருங்கள். மற்றவர்கள் கொஞ்சம் நின்று கொண்டிருங்கள். அது சரி. மேலே எழுந்து நில்லுங்கள். நான் வேறு எதையோ செய்ய தீர்மானித்தேன். ஆனால் பரிசுத்த ஆவியானவர், "இப்பொழுது சிறப்பாக பேசப்பட்டதை யாரோ ஒரு சிலருக்காக நேற்று இரவே பேசியிருக்க வேண்டும்" என்று அவர் கூறியதைப் போல தோன்றியது. இப்பொழுது எழுந்து நில்லுங்கள்."தேவனே இப்பொழுதும் நான் உம்முடைய ஊழியக்காரனாக இருக்க விரும்புகிறேன்". என்று சொல்லுங்கள். இப்பொழுது ஜெபத்தில் நம் தலைகள் வணங்கியிருக்கும் இந்த வேளையில் நீங்கள் என்ன செய்தீர்கள்? என்று உங்களுக்கு தெரியும். "இந்த உலகத்தில் எனக்காக நிற்பவனுக்காக, மறு உலகில் நான் அவனுக்காக நிற்பேன். இந்த உலகத்தில் அவன் எனக்கு சாட்சியாக இருந்ததற்காக, நானும் என் பிதாவுக்கு முன்பாகவும் தூதர்களுக்கு முன்பாகவும் அவனுக்காக சாட்சி கூறுவேன்". 38. நீங்கள் சில நிமிடங்களுக்கு முன்பாக கடந்து சென்றிருப்பீர்கள் என்றால் நீங்கள் இழக்கப்பட்டுப் போனவர்களாக இருப்பீர்கள். ஆனால் இன்றிரவு நீங்கள் இரட்சிக்கப்பட்டீர்கள் ஏனென்றால் ஆயிரக்கணக்கான ஜனங்களின் முன்னிலையில் நீங்கள் நின்று கொண்டிருந்தீர்கள் மேலும் தேவனுடைய சமூகத்திற்கு முன்பாகவும் பரிசுத்த தூதர்களுக்கு முன்பாகவும் நின்று கொண்டிருந்தீர்கள். ஆகவே அவர்கள் இப்பொழுது உங்கள் பெயரை ஆட்டுக்குட்டியானவருடைய ஜீவ புத்தகத்தில் வைத்துக் கொண்டிருக்கிறார்கள். இப்பொழுதும் பரலோகப் பிதாவே, பார்வையாளர்களாகிய இந்த பெருந்திரள் மக்களை உம்மிடம் சமர்ப்பிக்கிறேன். இந்த நேரத்தில் நின்று கொண்டிருக்கும் இவர்களை உம்மிடம் தருகிறேன். நீர் அவர்களுடைய இருதயங்களில் பேசினீர். நாங்கள் அதை விசுவாசிக்கும் போது, இன்னும் அநேகர்..... தங்களுடைய நிலையை உணர்ந்திருக்க வேண்டும். 39. தேவனே. நாங்கள் தேவனுடைய புறாவுக்கு செவி கொடுக்காத போது எப்படி நாங்கள் அசுசா வீதிக்கு திரும்புவதைக் கொண்டிருக்க முடியும். தேவனே அது கடினமான நியாயத் தீர்ப்பை எடுத்துக் கொள்ளும்; அது குடும்பத்தில் மரணத்தை உண்டாக்கும்; அது சில காரியங்களை செய்வதாக இருக்கிறது, தேவனே அதுஎன்ன விதமாக எடுத்துக் கொண்டாலும் எங்களை திரும்பவுமாக தேவனிடத்தில் கொண்டு வரும் என்று நான் உறுதியாக நம்புகிறேன். திரும்பவும் பண்டைய காலத்து பாணியிலான கூட்டங்களை கொண்டு வருவீராக. பரிசுத்தவான்கள் மத்தியில் இருந்த பணிவை திரும்பவும் கொண்டு வருவீராக. தேவனுடைய வல்லமையை திரும்பவுமாக எங்கள் சபைகளுக்குள் கொண்டு வருவீராக, கர்த்தாவே இதை அருளும். இன்றிரவு எங்களை வெறுமையாக்குவீராக. இந்த உலகத்தை எங்களிடம் இருந்து அப்புறப்படுத்துவீராக. தேவனே உமக்கு விருப்பம் இல்லாத ஒவ்வொரு காரியங்களையும் நீர் அப்புறப்படுத்துவீராக. ஓ...தேவனுடைய புறாவே எங்களை உம்முடைய பரிசுத்த ஆவியினால் நிரப்புவீராக, தேவனே இங்கே உள்ள தேவாலயத்தின் உச்சியிலிருந்து கீழே பறந்து வந்து, தடைகளை தாண்டி வந்து இவர்களுடைய இருதயங்களில் வாசம் செய்வீராக. பரிசுத்த ஆவியின் ஞானஸ்நானத்திற்காக அவர்கள் காத்திருக்கும் போது, இருபுறமும் கருக்குள்ள அந்த வார்த்தையானது, உலகத்தின் காரியங்களை வெட்டி எடுத்து அப்பால் கொண்டு சென்று அவர்களுடைய இருதயங்களில் கிறிஸ்து இயேசுவின் இராஜரீகத்தையும், ஐசுவரியத்தையும் அளிப்பதாக, இயேசுவின் நாமத்தில் நாங்கள் ஜெபிக்கிறோம். ஆமென். 40. தேவன் தாமே உங்களை ஆசீர்வதிப்பார்க. எத்தனை பேர் இன்றிரவு சுகமாக்கப்பட விரும்புகிறீர்கள்? சீக்கிரமாக எழுந்து நில்லுங்கள். எல்லாருமே சரீரப் பிரகாரமாகவும், ஆவிக்குரிய பிரகாரமாகவும் சுகமாக்கப்பட விரும்புகிறீர்கள். என்னே.... விரைவாக எல்லோரும் எழுந்து நில்லுங்கள். ஆமென். அந்த புறாவானது இந்த கட்டிடத்தினுள் சுற்றிலுமாக பறந்து கொண்டிருக்கிறது. அதை நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? அந்த வேளை வந்து விட்டது; அந்த நேரம் நெருங்கி விட்டது. உங்களுடைய இருதயங்களை திறவுங்கள். சுகமாக்கப்படவும், ஞானஸ்தானம் பண்ணுவதற்கும் பரிசுத்த ஆவியானவர் இங்கே இருந்து கொண்டிருக்கிறார். சர்வ வல்லமை உள்ள தேவனே, ஒவ்வொரு பிசாசையும், வியாதியையும் இயேசுவின் நாமத்தினால் நாங்கள் கடிந்து கொள்கிறோம், அவனை அப்பால் தூக்கி எறிந்து விடுவீராக?... அவர்கள் சுதந்திரமாக இருப்பார்களாக.....